“என்னை கர்த்தர் என் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினார். எனவே, நான் அவரது தாசனாக இருக்க முடியும். நான் யாக்கோபையும் இஸ்ரவேலையும் அவரிடம் திரும்ப அழைத்துச் செல்லமுடியும். கர்த்தர் என்னைக் கௌரவிப்பார். நான் எனது தேவனிடமிருந்து எனது பலத்தைப் பெறுவேன்,” கர்த்தர் என்னிடம் சொன்னார்,”
மிஷனரியின் முன்குறிக்கப்பட்ட நோக்கம் – ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்
இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்ததும், நடக்கிற முதல் விஷயம் நம்முடைய முன்கூட்டிய எண்ணங்கள், குறுகிய மனப்பான்மை, மற்ற எல்லா பற்றுகளும் உடைந்து போவது தான்— நாம் முழுக்க முழுக்க தேவனுடைய சொந்த நோக்கத்துக்கான ஊழியக்காரர்களாக மாற்றப்படுகிறோம். முழு மனிதகுலமும் தேவனை மகிமைப்படுத்தவும், என்றென்றும் அவரில் மகிழ்ச்சியாயிருக்கவுமே படைக்கப்பட்டது. பாவம் மனிதகுலத்தை வேறு பாதைக்கு திருப்பிவிட்டது. ஆனாலும் அது தேவனுடைய நோக்கத்தை கொஞ்சமும் மாற்றவில்லை. நாம் மறுபடியும் பிறக்கும்போது, மனிதகுலத்துக்கான தேவனுடைய பெரிய நோக்கத்தைப் புரிந்துகொள்கிறோம். அதாவது, அவர் நம்மை தமக்காகவே படைத்தார் என்பதைக் உணர்கிறோம். தேவனால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற இந்த உணர்வு பூமியிலேயே மிகவும் மகிழ்ச்சியானது. தேவனுடைய இந்த மகத்தான படைப்பின் நோக்கத்தை நாம் நம்ப கற்றுக்கொள்ள வேண்டும். தேவன் செய்யும் முதல் விஷயம், முழு உலகத்தின் அக்கறையையும் நம்முடைய இருதயத்தின் வழியாக கொண்டுவருவதுதான். தேவனுடைய அன்பும், அவருடைய சொந்த இயல்பும் நமக்குள் கொண்டுவரப்படுகிறது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய இயல்பு யோவான் 3:16-ல் தெளிவாகப் பார்க்கப்படுகிறது— “தேவன் உலகத்தை இவ்வளவாய் நேசித்தார்….”
தேவனுடைய படைப்பின் நோக்கத்துக்கு நம்முடைய ஆத்துமா எப்போதும் திறந்திருக்க வேண்டும். அதை நம்முடைய சொந்த எண்ணங்களோடு குழப்பவும், மூடவும் கூடாது. நாம் அப்படிச் செய்தால், எவ்வளவு வலித்தாலும் தேவன் நம்முடைய எண்ணங்களை ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும். ஒரு மிஷனரி என்பது தேவனுடைய ஊழியக்காரராக இருப்பதற்காகவே படைக்கப்பட்டவர். அவருடைய வாழ்க்கையில் தேவன் மகிமைப்பட வேண்டும். நாம் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் வழியாக தேவனுடைய நோக்கத்துக்கு முழுமையாக ஏற்றவர்களாக மாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்துவிட்டால், இயேசு கிறிஸ்து ஏன் இவ்வளவு கண்டிப்பாகவும் விடாமுயற்சியோடும் தம்முடைய கோரிக்கைகளை வைக்கிறார் என்பதும் புரியும். அவர் தம்முடைய ஊழியக்காரர்களிடம் முழுமையான நீதியை எதிர்பார்க்கிறார். ஏனென்றால் தேவனுடைய சொந்த இயல்பையே அவர்களுக்குள் வைத்திருக்கிறார்.
உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய நோக்கத்தை மறந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.
பிரசங்கி 7-9; 2 கொரிந்தியர் 13
ஆஸ்வால்டின் ஞான வார்த்தைகள்
நாம் தேவனுடைய வார்த்தையை மக்களிடையே திறமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால், கோட்பாடுகளோடு மட்டும் அல்லாமல் மக்களோடும் தொடர்பில் இருக்க வேண்டும். மனிதர்களோடு தொடர்பை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. தேவனுடைய ஊழியர்கள், 1341 L
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.