“நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொறுமை வெளிப்படக்கடவது. அப்பொறுமை உங்களை, நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல் முழுமையும் நிறைவும் உள்ளவர்களாக ஆக்கித் தன் பணியை நிறைவு செய்யும்.”
முழுமையாக அவருக்குரியவளாக மாறுதல்
நம்மில் பலருக்குப் பார்ப்பதற்கு எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றலாம். ஆனாலும், இன்னும் சில விஷயங்களில் நாம் கவனக்குறைவாகவும் சோம்பேறியாகவும் இருக்கிறோம். இது பாவம் என்று சொல்ல முடியாது. ஆனால், நம்முடைய பழைய சுபாவத்தின் எச்சங்கள் நம்மை கவனக்குறைவாக மாற்றுகின்றன. கவனக்குறைவு என்பது பரிசுத்த ஆவியானவருக்கு நாம் செய்கிற அவமரியாதை. நாம் தேவனை ஆராதிக்கும் விதத்திலாகட்டும், சாப்பிடும் குடிக்கும் விஷயங்களிலாகட்டும், எதிலும் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.
தேவனுடனான நம்முடைய உறவு சரியாக இருப்பது மட்டும் போதாது. அந்த உறவு நம்முடைய வெளிப்படையான வாழ்க்கையிலும் சரியாக வெளிப்பட வேண்டும். இறுதியில், தேவன் எதையும் விட்டுவிட மாட்டார்; நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு விஷயமும் அவருடைய கண்காணிப்பில் இருக்கிறது. தேவன் நம்மைப் பல வழிகளில் மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கே கொண்டு வருவார். நாம் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளும் வரை, அவர் நம்மை அந்த ஒரே இடத்திற்கே மீண்டும் கொண்டு வர சலிக்கமாட்டார். ஏனென்றால், நம்மை முழுமையான படைப்பாக உருவாக்குவதே அவருடைய நோக்கம். நம்முடைய அவசரமான சுபாவத்தால் வரும் பிரச்சினையாக இருக்கலாம். அல்லது நம்முடைய அலட்சியமான, அலைபாயும் சிந்தனையாக இருக்கலாம். அல்லது சுயநலமான, சுதந்திரமாக நடக்க நினைக்கும் மனப்பான்மையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், மிகுந்த பொறுமையோடு தேவன் நம்மை அந்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்கே மீண்டும் மீண்டும் கொண்டு வருகிறார். இந்தச் செயல்முறையின் வழியாக, நம்முடைய வாழ்க்கையில் இன்னும் முழுமையாகச் சரியாக இல்லாத அந்த ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்த அவர் முயற்சிக்கிறார்.
தேவனுடைய மீட்பைப் பற்றிய வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களைப் படிக்கும்போது நாம் ஒரு அற்புதமான அனுபவத்தைப் பெறுகிறோம். அவரிடத்தில் நம்முடைய இருதயம் முழுமையாக இருக்கிறது. அவர் நம்மில் செய்கிற அற்புதமான கிரியையினால், நாம் அவரோடு ஒட்டுமொத்தமாகச் சரியாக இருக்கிறோம் என்பதை உணர்கிறோம். “பொறுமை தன் கிரியையை முழுமையாகச் செய்யட்டும்…” என்று யாக்கோபு வழியாக பரிசுத்த ஆவியானவர் பேசுகிறார். அதாவது, “உங்கள் பொறுமை முழுமையான பலனைத் தரட்டும்” என்பதாகும். வாழ்க்கையின் சிறிய விஷயங்களில் கவனக்குறைவாக இருந்துவிட்டு, “சரி, இப்போதைக்கு இது போதும்” என்று சொல்லாதீர்கள். அது எதுவாக இருந்தாலும், நாம் முழுமையாக அவருக்குரியவர்களாக மாறும் வரை தேவன் அதை விடாமல் நமக்கு உணர்த்துவார்.
சங்கீதம் 54-56; ரோமர் 3
ஆஸ்வால்டின் ஞானம்
இயற்கையாகப் பார்த்தால், நம்மை உடனே மனம் தளரச் செய்வது அழிவுதான். உடலழகு, இயற்கை வாழ்க்கை, நட்பு, உறவுகள் என எல்லாமே அழியும்போது ஒரு மனிதன் மனம் தளர்கிறான். ஆனால், நாம் இயேசு கிறிஸ்துவை நம்பும்போது, இந்த விஷயங்கள் நம்மை மனம் தளரச் செய்வதில்லை என்று பவுல் கூறுகிறார். அந்த அழிவுகளின் மத்தியிலும் ஒரு ஒளி நமக்குத் தெரிகிறது.
உதவி கிடைக்கும் இடம்
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.