Hebrews 1:2a NLT
“இப்போது இந்த இறுதி நாட்களில் மீண்டும் தேவன் நம்மோடு பேசியிருக்கிறார். அவர் தன் குமாரன் மூலம் நம்மோடு பேசி இருக்கிறார். அவர் தன் குமாரன் மூலமாக இந்த முழு உலகையும் படைத்தார். எல்லாவற்றிற்கும் உரிமையாளராக தேவன் தன் குமாரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.”
Weekly Reflections • GRACE

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வாக்கியம் – ரஸ்ஸல் மூர்

புரட்டாதி 2, 20264 நிமிட வாசிப்பு

அஸ்லான் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் தான். ஆனால் உண்மையான யூதாவின் சிங்கம் நாம் மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.

உணவு மேசையைச் சுற்றி அடுத்த மூலையைத் தாண்டிப் போகும்போது, என்னுடைய மகன்களில் ஒருவன் சி. எஸ். லூயிஸின் ‘தி லயன், தி விட்ச் அண்ட் தி வார்ட்ரோப்’ புத்தகத்திலிருந்து சத்தமாக வாசிப்பதை நான் கேட்டேன். அந்த நார்னியா புத்தகங்கள் என் வாழ்க்கையில் எவ்வளவு அர்த்தம் கொண்டவை என்பதை நினைத்துக் கொண்டு, நான் நின்று கேட்கத் தொடங்கினேன். அவன் ஒரு வரியின் நடுவில் இருந்தான். வேகமாக வாசித்துக்கொண்டே அடுத்த பத்திக்குப் போகப் போனான். நான் அவனுக்குத் தெரியும்படி முன்னால் நின்று, “அங்கேயே நிறுத்து; அதை மறுபடி வாசி. அதுதான் இந்தப் புத்தகத்திலேயே ரொம்ப முக்கியமான வாக்கியம்” என்று சொன்னேன்.

அந்தப் புத்தகத்திலேயே அதுதான் எப்போதும் மிக முக்கியமான வாக்கியம் என்று நான் சொல்ல மாட்டேன்; அதைவிட முக்கியமான இன்னும் ஒரு டஜன் வாக்கியங்களை நான் சொல்ல முடியும். ஆனால் இப்போ நமக்கு அது தான் ரொம்ப முக்கியமான வாக்கியம் என்று நான் சொல்வேன்.

எட்மண்ட் தன் உடன்பிறந்தவர்களைக் காட்டிக்கொடுத்திருந்தான். வெள்ளை சூனியக்காரியின் தூண்டுதலும், ‘டர்கிஷ் டிலைட்’ இனிப்பின் ஆசையும் அதற்கு காரணம். அந்தத் துரோக சிறுவனை வாசகர்கள் வெறுக்கும்படி கதை முழுக்க நகர்ந்த பிறகு, நார்னியாவின் உண்மையான அரசனும் சிங்கமுமான அஸ்லான் அங்கே தோன்றி, குற்றவுணர்வோடு தோற்றுப்போய் இருந்த எட்மண்டை மற்றவர்களிடம் அழைத்துச் சென்றார்.

“இதோ உன் சகோதரன்,” என்று அவர் சொன்னார், “இப்போ—பழைய விஷயங்களைப் பற்றி அவனிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை.”

தடுமாறிக்கொண்டிருக்கிற ஒரு இளம் கிறிஸ்தவர் என்னைச் சந்திக்க வரும்போது, அவர் அல்லது அவள் பைபிள் சொல்லும் பரிசுத்தமான வாழ்க்கையை மதிக்காமல் நடக்க வேண்டும் என்பதற்காக வருவது அரிது. என் ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் அப்படி நடந்திருக்கலாம். ஆனால் இப்போது, மனவேதனையோடு வருகிற இந்த இளைஞர்கள் உண்மையிலே கிறிஸ்துவோடு நடக்க தங்களால் முடிந்ததைச் செய்ய முயல்கிறார்கள். தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்கிறார்கள். சோதனையோடு போராடுகிறார்கள். இயேசு தங்களை எப்படி வாழ விரும்புகிறாரோ அப்படியே வாழ முயல்கிறார்கள்.

இந்த இளம் கிறிஸ்தவர்கள் பலர், ஒரு weight loss app-ல் கலோரிகளை கணக்கிடுவது போல, “உண்மையான” சீஷர்கள் தங்களுடைய பரிசுத்தமாக்குதலில் எவ்வளவு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை எளிதாகக் கணக்கிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எல்லாருக்கும் நடக்கிறதுபோல, சீஷத்துவத்தில் எவ்வளவு ஆழமாகப் போகிறார்களோ, அவ்வளவு தங்களுடைய தொடர்ந்த பாவம் தாங்கள் நினைத்ததைவிட எவ்வளவு மோசமானது என்று புரிந்து கொள்கிறார்கள். பலர், தேவன் தங்கள்மேல் கோபமாக இருக்கிறார் என்றும், தேவ கிருபையின் சிங்காசனத்துக்கு அவர்கள் நெருங்கும்போது, “ஆஹா, யார் இப்படி பயந்து உள்ளே நுழைகிறார்கள் பாருங்கள்…” என்று சொல்லக் காத்திருக்கிறார் என்றும் நினைக்கிறார்கள்.

இதயம் சில விஷயங்களை நம்பலாம். வாய் அதைக் கன்பெஸ் செய்யலாம். ஆனா நரம்புகள் இன்னும் அதை உணராமல் இருக்கலாம். சில நேரங்களில், ஞாயிற்றுக்கிழமை நாம் கற்ற எல்லாவற்றையும் மீறி, நம்முள் இருக்கும் அந்தப் பகுதி பயந்து, தேவனுடைய அன்பைப் பெறுவதற்கு நாமே தகுதி சம்பாதிக்கணும் என்று துடிக்கிறது. இதனால் யோவான் 3:16, ஒரு விளம்பரக் குரல் “தேவன் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, கீழே மெல்ல “சில கட்டுப்பாடுகள் பொருந்தும்” என்று வேகமாகச் சொல்வது போல உணர வைக்கிறது.

அதனால் இந்தக் கிறிஸ்தவர்கள் ஜெபத்திலிருந்து, சில நேரங்களில் ஆராதனையிலிருந்தும் கூட, தங்களுடைய “வாழ்க்கையைச் சரிசெய்த பிறகு” தான் வருவோம் என்று விலகிப் போகிறார்கள். மதுப்பழக்கம், போதைப்பொருள் பழக்கம் அல்லது ‘டர்கிஷ் டிலைட்’ ஆசை மாதிரி, அவர்கள் நினைக்கும் இந்தத் தீர்வு அவர்களுடைய பிரச்சனையை இன்னும் மோசமாக்குகிறது. அவர்களில் பலர் இப்போதைய தடுமாற்றங்களால் மட்டுமல்ல. கடந்த காலத்தில் செய்த விஷயங்கள், காயப்படுத்தியவர்கள், அல்லது சொன்ன வார்த்தைகள் ஆகியவற்றால் வந்த குற்றவுணர்வாலும் சோர்ந்து போயிருக்கிறார்கள்.

எட்மண்ட் சந்தித்த அந்தக் காட்சியை லூயிஸ் காட்டுவது, அந்தப் பிரச்சனையின் மையத்தையே தாக்குகிறது. முதலில், அஸ்லான் கூட்டத்திலிருந்து தள்ளி, எட்மண்டுடன் தனியாக மெதுவாகப் பேசுகிறார். லூயிஸ் எழுதுகிறார்: “அஸ்லான் என்ன சொன்னார் என்று உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை (அதை யாரும் கேட்கவும் இல்லை), ஆனால் அது எட்மண்ட் ஒருபோதும் மறக்காத ஒரு உரையாடல்.”

இங்கே வரும் வார்த்தைகள், கல்லறைக்கு வெளியே உள்ள தோட்டத்தில் உயிர்த்தெழுந்த பிறகு இயேசு சொன்ன வார்த்தைகளை நினைவூட்டுகின்றன. பேதுரு தன் மறுதலிப்பும் இயேசுவை விட்டு ஓடியதுமாக இன்னும் வேதனையில் இருந்தபோது, ஆண்டவர் மரியாள் மகதலேனாவிடம், “நீ என் சகோதரர்களிடத்தில் போய், நான் என் பிதாவிடத்துக்கும் உங்கள் பிதாவிடத்துக்கும், என் தேவனிடத்துக்கும் உங்கள் தேவனிடத்துக்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்” என்றார் (யோவான் 20:17, ESV). அவர்கள் மிகப் பலவீனமாகவும் தோல்வியோடும் இருந்த அந்த நேரத்திற்குப் பிறகும், இயேசு அவர்களைச் சகோதரர்கள் என்று அழைக்க வெட்கப்படவில்லை. தேவன் அவர்களுக்கும் பிதா தான் என்றும், அவர் இன்னும் அவர்களுடைய தேவனே என்றும் அவர்களுக்கு நினைவூட்டினார் (எபி. 2:11).

“இதோ உன் சகோதரன், அப்புறம்—பழைய விஷயங்களைப் பற்றி அவனிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை.” இந்த மகிமையின் எடையை—இதைச் சொல்கிறவர் யார், ஏன் சொல்கிறார் என்பதைக்—நாம் உணர்ந்தால், நற்செய்தியின் ஒளி உலகம் முழுக்கப் பரவுவதைப் பார்ப்போம். அஸ்லான் கற்பனையே தான். ஆனால் யூதாவின் உண்மையான சிங்கம் இருக்கிறார். நாம் மறந்திருக்கக் கூடிய ஒரு சத்தியத்தை, நமக்கு மிகவும் தேவையான நேரத்திலேயே, அவர் நினைவூட்ட விரும்புகிறார்.