“வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “நான் பரிசுத்தராக இருப்பதால், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.”
பரிசுத்தமான வாழ்க்கைக்காகவே குறிக்கப்பட்டவர்
வாழ்க்கையின் நோக்கத்தை நாம எப்போதும் நமக்குள்ள நினைவுபடுத்திக்கிட்டே இருக்கணும். நாம சந்தோஷத்துக்காகவும் இல்ல, ஆரோக்கியத்துக்காகவும் நியமிக்கப்பட்டிருக்கல. பரிசுத்தமாக இருப்பதற்காகத்தான் நியமிக்கப்பட்டிருக்கோம். இன்றைக்கு நமக்கு ஆசைகளும் விருப்பங்களும் ரொம்ப அதிகமா இருக்கு. அதனால நம்முடைய வாழ்க்கையே அவைகளால் விழுங்கப்பட்டு, வீணாகிப் போய்க்கிடக்கு. அவற்றில் பல சரியானவையாகவும், உயர்வானவையாகவும், நல்லவையாகவும் இருக்கலாம். பின்னால அவை நிறைவேறவும் செய்யலாம். ஆனா அந்த இடைப்பட்ட காலத்துல, தேவன் அவற்றின் முக்கியத்துவத்தை நமக்கு குறைய வைக்கணும். ஒரு மனிதன் தன்னை பரிசுத்தமாக்கப்போகிற தேவனை ஏற்றுக்கொள்கிறானா என்பதுதான் உண்மையிலேயே முக்கியம். எந்த விலையைக் கொடுத்தாலும், ஒருத்தருக்கு தேவனோட சரியான உறவு இருக்கணும்.
நான் பரிசுத்தமா இருக்கணும்னு நம்புறேனா? தேவன் என்னுள்ளே வந்து என்னை பரிசுத்தமாக்க முடியும் என்று நம்புறேனா? உங்க பிரசங்கத்தின் மூலம் நான் பரிசுத்தமில்லாதவன்னு நீங்க எனக்கு புரிய வச்சா, நான் உங்க பிரசங்கத்தைக் கோபப்படுவேன். நற்செய்தி பிரசங்கம் உள்ளுக்குள்ள தீவிரமான எதிர்ப்பை எழுப்புது. ஏன்னா அது என்னுடைய பரிசுத்தமில்லாத தன்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர்றதுக்குத்தான். ஆனா அதே நேரத்துல, அது என்னுள்ளே தீவிரமான ஏக்கத்தையும் விருப்பத்தையும் எழுப்புது. மனிதகுலத்துக்கான தேவனுடைய ஒரே நோக்கம் பரிசுத்தம்தான். அவருடைய ஒரே இலக்கு பரிசுத்தவான்களை உருவாக்குவதுதான். தேவன் மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஒரு நிரந்தர ஆசீர்வாத இயந்திரம் கிடையாது. அவர் பரிதாபத்தால நம்மை இரட்சிக்க வரல. நாம் பரிசுத்தமாக இருக்கணும்னு அவர் நம்மை படைத்ததால்தான் அவர் நம்மை இரட்சிக்க வந்தார். கிறிஸ்துவின் சிலுவை மூலமான பாவநிவாரணம் என்றால், இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம், நமக்கும் தேவனுக்கும் நடுவில் இனி எந்தத் தடையும் இல்லாமல், தேவன் என்னை தம்மோடு முழுமையான ஒன்றிப்பில் மீண்டும் சேர்க்க முடியும் என்பதுதான்.
உங்களைப் பற்றியோ, பிறரைப் பற்றியோ உள்ள பரிதாபத்துக்காக, பரிசுத்தமான தேவனுக்குப் பொருந்தாத எந்த ஒரு பழக்கத்தையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளாதீங்க. பரிசுத்தம் என்றால், தேவனுக்கு முன்பாக உங்களுடைய நடையிலும், உங்க வாயிலிருந்து வரும் வார்த்தைகளிலும், உங்க மனசுல இருக்கிற ஒவ்வொரு எண்ணத்திலும் முழுமையான தூய்மை இருக்கணும் என்பதுதான். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் தேவனே ஆய்வு செய்யும்படி ஒப்புக்கொடுக்கணும். பரிசுத்தம் என்பது தேவன் எனக்கு கொடுக்கிற ஒன்றே மட்டும் கிடையாது. தேவன் எனக்குக் கொடுத்தது என்னுடைய வாழ்க்கையில வெளிப்படுறதுதான் பரிசுத்தம்.
சங்கீதம் 135-136; 1 கொரிந்தியர் 12
ஆஸ்வால்டின் ஞானம்
நாம் இயேசுவுக்குள் நிலைத்திருக்க முடியாத எந்த வாழ்க்கைச் சூழலும் கிடையாது. நமக்கு எங்கு வைக்கப்பட்டிருந்தாலும், அவருக்குள் நிலைத்திருக்க கற்றுக்கொள்ளணும். நம்முடைய பிரகாசமான பாரம்பரியம், 946 R
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.