2 Samuel 23:16
“ஆனால் அந்த மூன்று பெரும் வீரர்களும் பெலிஸ்தரின் படைக்குள் புகுந்து சென்றனர். பெத்லகேமின் நகரவாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்தனர். அம்முப்பெரும் வீரர்களும் அந்த தண்ணீரை தாவீதிடம் கொண்டு வந்தனர். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். கர்த்தருக்குக் காணிக்கையாக அதை நிலத்தில் ஊற்றிவிட்டான்.”
Daily Devotionals
NEW MERCIES

திருப்தியின் தண்ணீரை ஊற்றுவது

புரட்டாதி 3, 20262 நிமிட வாசிப்பு

சமீபத்துல உங்களுக்கு “பெத்லகேமின் கிணற்றுத் தண்ணீர்” போல இருந்தது எது— அன்பா, நட்பா, இல்லன்னா ஏதாவது ஆவிக்குரிய ஆசீர்வாதமா (2 சாமுவேல் 23:16)? உங்களுடைய சொந்த ஆத்துமாவுக்கே கெடுதல் வரும்னு தெரிஞ்சும், உங்களைத் திருப்திப்படுத்திக்கறதுக்காக அதை நீங்க எடுத்துக்கிட்டீங்களா? அப்படி நீங்க செஞ்சிருந்தா, அதை “ஆண்டவருக்கு” ஊற்றிப்படைக்க முடியாது. உங்களுக்கே வேண்டிய ஒரு விஷயத்தை, உங்க சொந்த திருப்திக்காக, தேவனுக்காகப் பிரிச்சு வைக்கவே முடியாது. தேவனிடமிருந்து வந்த ஆசீர்வாதத்தைக் கொண்டு உங்களை நீங்களே திருப்திப்படுத்த நினைச்சா, அது உங்களைக் கெடுத்துடும். அதை நீங்க தேவனுக்கே ஊற்றிப்படைச்சு பலியாக்கணும்— இது முட்டாள்தனமான வீணடிப்புனு உங்க பொது அறிவு சொல்லலாம்.

இயல்பான அன்பையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் நான் எப்படி “ஆண்டவருக்கு” ஊற்றிப்படைக்க முடியும்? அதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு— இதைச் செய்யணும்னு என் மனசுல நான் உறுதியா தீர்மானிக்கணும். மற்றவங்க செய்ற சில காரியங்களை, தேவனை அறியாத ஒருத்தரால் ஒருபோதும் ஏத்துக்க முடியாது. ஏன்னா அவற்றுக்கு மனிதரால திருப்பிக் கொடுக்கவே முடியாது. ஒரு காரியம் எனக்கு ரொம்ப அற்புதமா இருக்கு, அதை வாங்கிக்கற தகுதி எனக்கு இல்லை, அது மனிதனுக்காகவே கொடுக்கப்பட்டதில்லைனு நான் உணர்ந்த உடனே, அதை நான் “ஆண்டவருக்கு” ஊற்றிப்படைக்கணும். அப்போ, எனக்குக் கிடைச்ச அதே காரியங்கள், என்னைச் சுற்றிலும் “ஜீவத்தண்ணீருள்ள நதிகளா” பாய்ந்தோடும் (யோவான் 7:38). நான் இந்த காரியங்களை தேவனுக்கே ஊற்றிப்படைக்கிற வரைக்கும், அவை எனக்கும் நான் நேசிக்கிறவங்களுக்கும் ஆபத்துதான். ஏன்னா அவை இச்சையாக மாறிடும். ஆமாம், கெட்டதும் கேவலமானதுமான விஷயங்கள்ல மட்டுமல்ல, நல்ல விஷயங்கள்ல கூட நாம இச்சையுள்ளவங்களா மாற முடியும். அன்பு கூட “ஆண்டவருக்கு” ஊற்றிப்படைக்கப்படும்போதுதான் மாற்றப்படணும்.

நீங்க கசப்பானவங்களாகவும் எரிச்சலானவங்களாகவும் மாறியிருந்தா, அதுக்குக் காரணம் தேவன் உங்களுக்கு ஒரு ஆசீர்வாதத்தைத் தந்தப்போ, அதை நீங்க உங்களுக்காகவே சேர்த்து வச்சதுதான். ஆனா, அதை அவருக்கே ஊற்றிப்படைச்சிருந்தா, இந்த உலகத்துலேயே நீங்கதான் ரொம்ப இனிமையான மனிதரா இருந்திருப்பீங்க. நீங்க எப்பவுமே ஆசீர்வாதங்களை உங்களுக்கே வச்சுக்கிட்டு, “ஆண்டவருக்கு” எதையும் ஊற்றிப்படைக்கக் கத்துக்காம இருந்தா, மற்றவங்க உங்க மூலமா தேவனைப் பற்றிய அவங்களோட பார்வையை ஒருபோதும் விரிவுபடுத்திக்க முடியாது.

சங்கீதம் 140-142; 1 கொரிந்தியர் 14:1-20


ஆஸ்வால்டின் ஞானம்

நம்முடைய விருப்பத்துக்கு ஏத்த மாதிரி தேவனுடைய வார்த்தையை நீர்த்துப்போகச் செய்யுறதுதான் நமக்கு இருக்குற ஆபத்து. தேவன் ஒருபோதும் அவருடைய வார்த்தையை எனக்கு ஏத்த மாதிரி மாற்றுறது இல்லை; மாறாக, அவருடைய வார்த்தைக்கு ஏத்த மாதிரி என்னைத்தான் அவர் மாற்றுறார். எங்கே என்று அறியாமல், 901 R