“அந்த நாளில் நீங்கள் பிதாவிடம் என்பேரில் உங்களுக்கானதைக் கேட்பீர்கள். நான் உங்களுக்காக என் பிதாவிடம் கேட்டுக்கொள்ளும் தேவை இருக்காது என்று சொல்கிறேன்.”
ஜெபத்தில் சிலுவை
கிறிஸ்துவின் சிலுவையை நாம் கடந்து போக வேண்டிய ஒரு விஷயமாத்தான் அடிக்கடி நினைக்கிறோம். ஆனா, நாம அதை கடந்து போறதே அதற்குள்ளே நுழைவதற்காகத்தான். சிலுவை நமக்கு ஒரே ஒரு விஷயத்தைத்தான் காட்டுது—அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு முழுமையா, முற்றிலும், முழுசா ஒன்றிணைவதுதான். ஜெபத்தில் இருக்கிறதை விட வேற எதிலுமே இந்த ஒன்றிணைதல் நமக்கு இவ்வளவு உண்மையானதா இருக்க முடியாது.
“உங்க பிதாவுக்கு, அவரிடம் கேட்கிறதற்கு முன்னாடியே உங்களுக்கு என்ன தேவைன்னு தெரியும்” (மத்தேயு 6:8). அப்போ நாம ஏன் கேட்கணும்? ஜெபத்தோட நோக்கம் தேவன்கிட்ட இருந்து பதில்களைப் பெறுவது மட்டும் கிடையாது, அவரோடு முழுமையான ஒன்றிப்பை கொண்டிருப்பதுதான். நமக்கு பதில் வேணும்கிறதுக்காகவே நாம ஜெபம் பண்ணா, தேவனோட எரிச்சலும் கோபமும் தான் வரும். நாம ஜெபம் பண்ணும்போதெல்லாம் நமக்கு பதில் கிடைக்குது. ஆனா அது எப்பவுமே நாம் எதிர்பார்க்கிற மாதிரி வர்றதில்லை. நம்ம மனசுல வர்ற ஆவிக்குரிய எரிச்சல், ஜெபத்துல நம்ம ஆண்டவரோடு உண்மையா ஒன்றிணைய நாம் மறுக்கிறோம் அப்படிங்கிறதைத்தான் காட்டுது. தேவன் ஜெபத்துக்கு பதில் தர்றார்னு நிரூபிக்கிறதுக்காக நாம் இங்க இல்லை. மாறாக, தேவனுடைய கிருபையின் உயிருள்ள சாட்சிகளா இருக்கத்தான் இங்க இருக்கிறோம்.
“…நான் உங்களுக்காக பிதாவிடம் ஜெபிப்பேன் என்று உங்களுக்குச் சொல்லவில்லை; பிதா தாமே உங்களை நேசிக்கிறார்…” (யோவான் 16:26-27). தேவனோடு உங்களுக்கு அந்த அளவுக்கு நெருக்கம் வந்திருக்கா? உங்க ஜெப வாழ்க்கைக்கு ஒரே விளக்கம், அது இயேசு கிறிஸ்துவின் ஜெப வாழ்க்கையோடு ஒன்றாகிப் போயிருப்பதுதான் அப்படின்னு சொல்ல முடியுமா? நம்முடைய ஆண்டவர் உங்க வாழ்க்கையை அவருடைய உயிருள்ள வாழ்க்கையோடு மாற்றியிருக்கிறாரா? அப்படி இருந்தா, “அந்நாளில்” நீங்க இயேசுவோடு அவ்வளவு நெருக்கமா ஒன்றிணைந்திருப்பீங்க. அப்போ எந்த வித்தியாசமும் இருக்காது.
நம்ம ஜெபத்திற்கு பதில் கிடைக்காத மாதிரி தோணும்போது, பழியை மத்தவங்க மேல போட பார்க்காதீங்க. அது எப்பவுமே சாத்தானுடைய ஒரு வலைதான். உங்களுக்கு பதில் கிடைக்காத மாதிரி தோணும்போது, அதுக்கு எப்பவுமே ஒரு காரணம் இருக்கும்— உங்களுக்கு ஆழமான தனிப்பட்ட போதனையை தர்றதுக்காக தேவன் இந்த நேரங்களைப் பயன்படுத்துறார். அது வேற யாருக்கும் இல்லை; உங்களுக்குத்தான்.
சங்கீதம் 70-71; ரோமர் 8:22-39
ஆஸ்வால்டின் ஞானம்
பயபக்தி என்பது, தேவன் யார் என்றும், அவர் தனக்காக தனிப்பட்ட முறையில் என்ன செய்திருக்கிறார் என்றும் ஒருவருடைய ஆவி உணர்ந்துகொள்கிற நிலை. நம்ம ஆண்டவர் ஒரு குழந்தையோட மனப்பான்மையைத்தான் முக்கியப்படுத்துறார். ஒரு குழந்தையோட மனப்பான்மையைத் தவிர, இவ்வளவு ஆழமான பயபக்தியையும் நெருக்கத்தையும் வேற எதுவும் வெளிப்படுத்த முடியாது. – எங்கே போகிறோம் என்று அறியாமல், 882 L
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.