“இயேசு மார்த்தாளிடம், “நான் சொன்னவற்றை நினைத்துப்பார். நீ என்னை நம்புகிறதானால் தேவனின் மகிமையை அறியலாம் எனச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.”
சோதிக்கப்பட்ட விசுவாசத்தின் ஈடு இணையற்ற நெருக்கம்
நீங்கள் விசுவாச வாழ்க்கையில் ஒவ்வொரு முறை முன்னேற முயற்சிக்கும் போதும், உங்கள் சூழ்நிலைகளில் ஏதோ ஒன்று உங்கள் விசுவாசத்திற்கு நேரே எதிராக இருப்பதை உணர்வீர்கள். ஆனால், நடைமுறை அறிவும் விசுவாசமும் ஒன்றல்ல. உண்மையில், இயற்கை வாழ்வும் ஆவிக்குரிய வாழ்வும் எவ்வளவு வேறுபட்டதோ, அவ்வளவு வேறுபாடு இவை இரண்டுக்கும் உண்டு. உங்கள் நடைமுறை அறிவு நம்ப முடியாத இடத்திலும், இயேசு கிறிஸ்துவை நம்ப முடிகிறதா? உங்கள் அன்றாட வாழ்க்கையின் உண்மைகள், “இதெல்லாம் பொய்” என்று கத்திக்கொண்டே இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் மீது தைரியமாக முன்னேற முடிகிறதா? நீங்கள் மலை உச்சியில் இருக்கும்போது, “ஆமாம், தேவன் இதைச் செய்வார் என்று நம்புகிறேன்” என்று சொல்வது எளிது. ஆனால் அந்த மலைவிட்டு கீழே இறங்கி, பிசாசு பிடித்துள்ள பள்ளத்தாக்கிற்குச் சென்று, உங்கள் வெளிப்படுத்தப்பட்ட மகிமை விசுவாசத்தை கேலி செய்யும் உண்மைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் (லூக்கா 9:28-42-ஐப் பார்க்கவும்). என்னுடைய இறையியல் என் மனத்தில் தெளிவாகும் ஒவ்வொரு முறையும், அதற்கு முரணான ஒன்றை நான் சந்திக்கிறேன். “தேவன் என்னுடைய எல்லாத் தேவைகளையும் சந்திப்பார்” என்று நான் சொன்ன உடனே, என்னுடைய விசுவாசத்தின் சோதனை தொடங்கிவிடுகிறது (பிலிப்பியர் 4:19). என்னுடைய பலம் குறைந்து, என் பார்வை மங்கும்போது, இந்த விசுவாசச் சோதனையை ஜெயமாகத் தாங்குவேனா, இல்லையா தோல்வியோடு பின்வாங்குவேனா?
விசுவாசம் சோதிக்கப்பட வேண்டியது தான். ஏனென்றால், மோதல்களின் வழியாகத்தான் அது உங்களுடைய ஆழ்ந்த சொந்தமானதாக மாறும். இப்போதே உங்கள் விசுவாசத்தை என்ன சவாலாக்குகிறது? இந்தச் சோதனை உங்கள் விசுவாசம் சரி என்பதை நிரூபிக்கும். இல்லையெனில் அதை முற்றிலும் அழித்துவிடும். இயேசு, “என்னிமித்தம் இடறலடையாதவன் பாக்கியவான்” என்று சொன்னார் (மத்தேயு 11:6). இறுதியில் முக்கியமானது, இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கையே. “நாம் தொடக்கத்தில் வைத்திருந்த நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பிடித்திருந்தால், நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாகி இருப்போம்…” (எபிரெயர் 3:14). அவர்மீது உறுதியாக நம்பிக்கை வையுங்கள்; உங்களைச் சவாலாக்கும் எல்லாமே உங்கள் விசுவாசத்தை மேலும் பலப்படுத்தும். நம்முடைய உடல் மரணம் வரைக்கும் விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து சோதனைகள் இருக்கும். அதுவே கடைசி பெரிய சோதனை. விசுவாசம் என்பது தேவன் மீது வைக்கும் முழுமையான நம்பிக்கை. அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவார் என்று கனவிலும் நினைக்க முடியாத அளவுக்கு உறுதியான நம்பிக்கை அது (எபிரெயர் 13:5-6-ஐப் பார்க்கவும்).
சங்கீதம் 126-128; 1 கொரிந்தியர் 10:19-33
ஆஸ்வால்டின் ஞானம்
கிருபையினாலே நான் இரட்சிக்கப்பட்டேன் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு ஏற்ற பலன்களை வெளிப்படுத்தாதவருக்கு புதிய ஏற்பாட்டில் எந்தச் சலுகையும் இல்லை. இயேசு கிறிஸ்து தம்முடைய மீட்பின் மூலம், நாம் சொல்லும் விசுவாசத்துக்கேற்றவாறு நம்முடைய உண்மையான வாழ்க்கையை மாற்ற முடியும்.
மலைப்பிரசங்கப் பாடங்கள்
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.