“எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டே நடந்துச் சென்றார்கள். திடீரென்று இரதமும் குதிரைகளும் வந்து இருவரையும் பிரித்தன. அவை நெருப்பாகத் தோன்றின! எலியா சுழற்காற்றால் வானுலகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். எலிசா இதனைப் பார்த்து, “என் தந்தையே! என் தந்தையே! இஸ்ரவேலின் இரதமும் குதிரை வீரருமானவரே!” என்று சத்தமிட்டான். இதற்குப் பிறகு எலியாவை எலிசா பார்க்கவில்லை. அவன் தனது ஆடையைக் கிழித்து தன் சோகத்தை வெளிப்படுத்தினான்.”
இந்த அனுபவம் வந்தே ஆகணும்
தேவன் உங்களுடைய ‘எலியாவை’ உங்களுக்குத் தந்திருக்கிற வரைக்கும், நீங்க அவரைச் சார்ந்து இருக்கிறது தப்பில்லை. ஆனா, அவர் உங்களை விட்டுப் போக வேண்டிய ஒரு காலம் வரும். அப்போ அவர் இனிமேல் உங்களுடைய வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருக்க மாட்டார். ஏன்னா, அவர் தொடர்ந்து இங்கேயே இருக்கணும்னு தேவன் விரும்பல. அதைப்பற்றி நினைக்கிறப்பவே, ‘என்னுடைய எலியா இல்லாமல் என்னால தொடர்ந்து போக முடியாது’ன்னு உங்களுக்குச் சொல்லத் தோணும். ஆனாலும், நீங்க தொடர்ந்து போகணும்னுதான் தேவன் சொல்றார்.
உங்களுடைய ‘யோர்தானில்’ தனியாக (2 இராஜாக்கள் 2:14). யோர்தான் நதி எதைக் குறிக்குதுன்னா, வேற யாருடனும் ஐக்கியம் இல்லாத ஒரு பிரிவைத்தான் குறிக்குது. அதுல உங்களுடைய பொறுப்பை வேற யாரும் எடுத்துக்க முடியாது. உங்களுடைய ‘எலியாவோடு’ இருந்தப்ப நீங்க கத்துக்கிட்ட விஷயங்களை இப்போ நீங்க சோதிச்சுப் பார்க்கணும். நீங்க எலியாவோடு சேர்ந்து யோர்தானுக்குத் திரும்பத் திரும்பப் போயிருக்கீங்க. ஆனா இப்போ அதைத் தனியா எதிர்கொள்றீங்க. என்னால போக முடியாதுன்னு சொல்றதுல ஒரு பயனும் இல்லை— அந்த அனுபவம் உங்க முன்னாடி இருக்கு, நீங்க போய்த்தான் ஆகணும். உங்களுடைய விசுவாசம் நம்புறபடியே தேவன் உண்மையிலேயே அப்படிப்பட்டவரா இல்லையான்னு நீங்க உண்மையா தெரிஞ்சுக்க விரும்பினா, உங்களுடைய ‘யோர்தானை’ நீங்க தனியாகக் கடந்து போங்க.
உங்களுடைய ‘எரிகோவில்’ தனியாக (2 இராஜாக்கள் 2:15). உங்களுடைய ‘எலியா’ பெரிய காரியங்களைச் செய்ததை நீங்க பார்த்த இடம்தான் எரிகோ. ஆனா, நீங்க தனியா உங்களுடைய ‘எரிகோவுக்கு’ வரும்போது, நீங்களே முன்னின்று தேவனை நம்பறதுல பெரிய தயக்கம் காட்டுறீங்க. அதுக்குப் பதிலா, வேற யாராவது அதை உங்களுக்காகச் செய்யணும்னு விரும்புறீங்க. ஆனா உங்களுடைய ‘எலியாவோடு’ இருந்தப்ப நீங்க கற்றுக்கிட்ட விஷயங்களுக்கு உண்மையா இருந்தீங்கன்னா, தேவன் உங்களோடு இருக்கிறார் என்கிற அடையாளத்தை எலிசா பெற்றதைப்போல நீங்களும் பெறுவீங்க.
உங்களுடைய ‘பெத்தேலில்’ தனியாக (2 இராஜாக்கள் 2:23). உங்களுடைய ‘பெத்தேலில்’ என்ன செய்யறதுன்னே தெரியாத ஒரு எல்லையில் நீங்க நிப்பீங்க. ஆனா அதுதான் தேவனுடைய ஞானத்தின் ஆரம்பம். நீங்க என்ன செய்யறதுன்னே தெரியாம பதற்றப்படத் தோணும்போது— பதற்றப்படாதீங்க! தேவனுக்கு உண்மையா இருங்க. உங்களுடைய வாழ்க்கையை ஆராதனையின் வெளிப்பாடாக மாற்றும் வழியில் அவர் அவருடைய சத்தியத்தை வெளிப்படுத்துவார். உங்களுடைய ‘எலியாவோடு’ இருந்தப்ப நீங்க கத்துக்கிட்டதை நடைமுறைப்படுத்துங்க— அவருடைய சால்வையைப் பயன்படுத்தி ஜெபம் செய்யுங்க (2 இராஜாக்கள் 2:13-14-ஐப் பாருங்க). தேவனை நம்புவதில் உறுதியா இருங்க. இனிமேல் எலியாவைத் தேடாதீங்க.
சங்கீதம் 81-83; ரோமர் 11:19-36
ஆஸ்வால்டின் ஞானம்
ஒரு மனிதனால பள்ளத்தாக்குல தன்னுடைய விசுவாசத்தை நிரூபிக்க முடியலன்னா, அதுக்கு ஒரு மதிப்பும் இல்லை. அவருடைய கரத்தின் நிழல், 1200 L
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.