“பிரதான ஆசாரியராகிய இயேசுவால் நமது பலவீனங்களைப் புரிந்துகொள்ள முடியும். பூமியில் வாழ்ந்தபோது அனைத்து வகைகளிலும், நம்மைப் போலவே அவரும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவமே செய்யவில்லை.”
அவருடைய சோதனையும் நம்முடைய சோதனையும் – ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்
நாம் மறுபடியும் பிறக்கும் வரை, யாக்கோபு 1:14-ல் சொல்லப்பட்டிருக்கிற சோதனையை மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும்: “அவனவன் தன்தன் சுயஇச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.” ஆனால் மறுபிறப்பின் மூலமாக நாம் வேறொரு ஆன்மீக நிலைக்கு உயர்த்தப்படுகிறோம். அங்கே நம்முடைய ஆண்டவர் சந்தித்த சோதனைகளைப் போன்ற வேறு சோதனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. நாம் விசுவாசிகளாக இல்லாதபோது, இயேசுவின் சோதனைகள் நம்முடைய மனித சுபாவத்திற்கு பொருந்தாததால், அவை நம்மை கவரவில்லை. நாம் மறுபடியும் பிறந்து அவருடைய சகோதரர்களாக மாறும் வரை, நம்முடைய ஆண்டவரின் சோதனைகளும் நம்முடைய சோதனைகளும் வெவ்வேறு நிலைகளில்தான் இருக்கின்றன. இயேசுவின் சோதனைகள் ஒரு சாதாரண மனிதனின் சோதனைகள் அல்ல. அவை மனிதனாக வந்த தேவனுடைய சோதனைகள். மறுபிறப்பின் மூலமாக, தேவனுடைய குமாரன் நமக்குள்ளே உருவாகிறார் (கலாத்தியர் 4:19-ஐப் பாருங்கள்). நம்முடைய சரீர வாழ்க்கையில், அவர் பூமியில் வாழ்ந்த அதே சூழ்நிலையைப் பெறுகிறார். நாம் தவறான காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் சாத்தான் நம்மை சோதிப்பதில்லை. மறுபிறப்பின் மூலமாக தேவன் நமக்குள்ளே வைத்ததை, அதாவது தேவனுக்கு பயனுள்ளவர்களாக இருப்பதற்கான வாய்ப்பை, நாம் இழந்துபோக வேண்டும் என்பதற்காகவே அவன் நம்மை சோதிக்கிறான். அவன் நம்மை பாவம் செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் நம்மிடம் வருவதில்லை. மாறாக, நம்முடைய பார்வையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிறான். இதை பிசாசின் சோதனை என்று தேவனுடைய ஆவியானவரால் மட்டுமே கண்டறிய முடியும்.
சோதனை என்பது, நமக்கு வெளியே இருக்கிற, நமக்குச் சம்பந்தமில்லாத ஒரு வல்லமையால், நம்முடைய ஆவிக்குரிய உள்ளத்தில் இருக்கிற பொக்கிஷங்களைச் சோதித்துப் பார்ப்பதாகும். இது நம்முடைய ஆண்டவரின் சோதனையை எளிதாகப் புரிந்துகொள்ள வைக்கிறது. இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, “உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர்” (யோவான் 1:29) என்ற தம்முடைய பணியை ஏற்றுக்கொண்டு, “ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு” (மத்தேயு 4:1) பிசாசின் சோதனைகளுக்குள் சென்றார். இருப்பினும், அவர் சோர்வடையவுமில்லை, தளர்ந்துபோகவுமில்லை. அவர் “பாவமில்லாமல்” அந்தச் சோதனையைக் கடந்து வந்தார். தம்முடைய ஆவிக்குரிய சுபாவத்தின் எல்லாப் பொக்கிஷங்களையும் முழுமையாக அப்படியே காத்துக்கொண்டார்.
நீதிமொழிகள் 30-31; 2 கொரிந்தியர் 11:1-15
ஆஸ்வால்டின் ஞான மொழிகள்
தீர்க்கதரிசிகளின் செய்தி என்னவென்றால், மக்கள் தேவனை கைவிட்டிருந்தாலும், அது தேவனை மாற்றவில்லை. நாம் உண்மையற்றவர்களாக இருந்தாலும், தேவன் மாறாமல் தேவனாகவே இருக்கிறார் என்ற அதே சத்தியத்தை அப்போஸ்தலனாகிய பவுலும் வலியுறுத்துகிறார் (2 தீமோத்தேயு 2:13-ஐப் பாருங்கள்). நம்முடைய மாற்றங்களுக்கு ஏற்ப தேவனும் மாறுகிறார் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அவர் ஒருபோதும் மாறுவதில்லை. அவரிடத்தில் எந்த மாறுதலும் இல்லை. எஸேக்கியேல் பற்றிய குறிப்புகள், 1477 L
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.