John 7:17
“தேவனின் விருப்பப்படி செயல்புரிய ஒருவன் விரும்பினால், அவன் என் உபதேசம் தேவனிடமிருந்து வந்தது என்பதை அறிந்துகொள்வான். அதோடு அவன், இந்த உபதேசம் எனக்குச் சொந்தமானது அல்ல என்பதையும் அறிந்துகொள்வான்.”
Daily Devotionals
NEW MERCIES

அறிவுக்கான வழி

ஆடி 27, 20262 நிமிட வாசிப்பு

ஆவிக்குரிய புரிதலுக்கான சாவி அறிவாற்றல் கிடையாது; அது கீழ்ப்படிதல் தான். எனக்கு அறிவியல் அறிவு வேணும்னா, அறிவுசார்ந்த ஆர்வம் தான் எனக்கு வழிகாட்டும். ஆனா, இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பற்றிய ஆழமான புரிதல் எனக்கு வேணும்னா, அதை கீழ்ப்படிதலால மட்டும்தான் பெற முடியும். இயேசு போதிச்சது எனக்குப் புரியாமல் இருளா தெரிஞ்சா, நான் செய்ய மறுக்கிற ஏதோ ஒரு விஷயம் என்கிட்ட இருக்குன்னு நான் உறுதியா சொல்லலாம். அறிவுசார்ந்த இருள் அறியாமையினால வருது. ஆனா ஆவிக்குரிய இருள் வர்றதுக்கு காரணம், நான் கீழ்ப்படிய விரும்பாத ஏதோ ஒரு விஷயம் என்கிட்ட இருக்கிறது தான்.

தேவனிடமிருந்து ஒரு செய்தியைப் பெறுற யாருமே, உடனே ஒரு சோதனைக்குள்ளாக நிற்காம இருக்க முடியாது. நாம கீழ்ப்படியாம போறதுனால அந்தச் சோதனையில தோத்துப் போயிடுறோம். அப்புறம், ஏன் நாம ஆவிக்குரிய வாழ்க்கையில முன்னேறலன்னு யோசிச்சு ஆச்சரியப்படுறோம். “நீங்க பலிபீடத்துல உங்க காணிக்கையை செலுத்தும்போது, உங்க சகோதரனுக்கோ சகோதரிக்கோ உங்க மேல ஏதோ இருக்குன்னு அங்க உங்களுக்கு ஞாபகம் வந்தா, முதல்ல போய் அவங்களோட சமாதானமாகுங்க” என்று இயேசு சொல்லியிருக்கிறார் (மத்தேயு 5:23–24). நம்முடைய ஆண்டவருடைய போதனை நம்முடைய அன்றாட வாழ்க்கையை அப்படியே தொட்டுப் பேசுது. நம்முடைய வெளிவேஷம் வெளிப்படாமல், இயேசுவுக்கு முன்னாடி ஒரு நொடி கூட நம்மால நிற்க முடியாது. அவருடைய ஆவி நமக்குள்ள இருக்கிற சுயநீதியை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அவர் நம்மை நுணுக்கமாகக் கற்றுத்தந்து, இதுக்கு முன்னாடி நாம யோசிச்சுக்கூடப் பார்க்காத சின்னச் சின்ன விஷயங்களுக்கே நம்மை உணர்வுள்ளவர்களா மாற்றுகிறார்.

இயேசு அவருடைய போதனை மூலமா உங்களுக்கு எதையாவது உணர்த்தும்போது, அதை அலட்சியப்படுத்திடாதீங்க. அப்படி செஞ்சீங்கன்னா, நீங்க ஒரு மதவெளிவேஷக்காரரா மாறிடுவீங்க. இப்போ நீங்க அலட்சியப்படுத்துற விஷயங்களை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, அப்போ ஏன் நீங்க ஆவிக்குரிய வாழ்க்கையில முன்னேறலன்னு உங்களுக்கே புரியும். மத்தவங்க உங்களை தீவிரமானவர்னு சொன்னாலும் சரி, தேவன் உங்களுக்குச் சொல்றதுக்குக் கீழ்ப்படியுங்க; அப்போ நீங்க தேடுற புரிதல் உங்களுக்குக் கிடைக்கும். தேவன் போங்கன்னா, போங்க.

சங்கீதம் 43-45; அப்போஸ்தலர் 27:27-44


ஆஸ்வால்டிடமிருந்து ஞானம்

வேதம் நமக்குத் திடீர்னு கிளர்ச்சியைத் தராது; அது நமக்கு ஊட்டமளிக்கிறது. வேதத்தை வாசிக்க நேரம் ஒதுக்குங்க, அப்போ உடலுக்கு கிடைக்கிற புதிய காற்று எவ்வளவு உண்மையோ, அதே மாதிரி அது உங்களைப் புதுப்பிக்கிறதும் அதே அளவு உண்மையானது. மெய்யான சீஷர்கள், 387 R