Luke 18:31
“பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும்.”
Daily Devotionals
NEW MERCIES

மிஷனரியின் இலக்கு – ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்

புரட்டாதி 23, 20262 நிமிட வாசிப்பு

நம்ம இயல்பான வாழ்க்கையில நம்ம வளர வளர நம்ம ஆசைகள் மாறிக்கிட்டே இருக்கும். ஆனா கிறிஸ்தவ வாழ்க்கையில இலக்கு ஆரம்பத்திலேயே கொடுக்கப்படிருக்கு. ஆரம்பமும் முடிவும் ஒரே மாதிரிதான். அது நம்முடைய கர்த்தர் தாமே. நாம கிறிஸ்துவோட ஆரம்பிக்கிறோம். அவரோடதான் முடிக்கிறோம்— “…நாமெல்லாரும்… கிறிஸ்துவின் நிறைவான அளவுக்கு வரும்வரை…” (எபேசியர் 4:13). கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கணும்னு நம்ம எண்ணத்துக்கு வர்றதல்ல. கிறிஸ்துவின் நிறைவுக்கே வர்றதுதான். மிஷனரியோட இலக்கு தேவனுடைய சித்தத்தைச் செய்வதுதான். பயனுள்ளவரா இருக்கணும், இல்ல இழந்தவர்களை ரட்சிக்கணும்னு இல்லை. ஒரு மிஷனரி பயனுள்ளவராக இருப்பார். அவர் இழந்தவர்களையும் ரட்சிப்பார். ஆனா அதுதான் அவருடைய இலக்கு இல்லை. அவருடைய இலக்கு தன் கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதுதான்.

நம்ம கர்த்தருடைய வாழ்க்கையில, சிலுவையில் பிதாவின் சித்தம் நிறைவேறின இடம் எருசலேம். இயேசுவோடு நாம அங்கே போகலைன்னா, அவரோடு நமக்கு நட்போ ஐக்கியமோ இருக்காது. எருசலேமுக்குப் போற வழியில எதுவுமே நம்ம கர்த்தரை ஒருபோதும் திசைதிருப்பல. அவரைத் துன்புறுத்தின சில கிராமங்கள்ல அவர் அவசரமா கடந்து போகல. வேற சில இடங்கள்ல ஆசீர்வாதம் கிடைச்சதுனால அவர் அங்கே நீண்ட நேரம் தங்கல. நன்றியும் நன்றியின்மையும், எதுவுமே நம்ம கர்த்தரை “எருசலேமுக்குப் போற” அவருடைய நோக்கத்திலிருந்து கொஞ்சம்கூட மாற்றல.

“சீஷன் தன் போதகனைவிட மேன்மையுள்ளவன் அல்ல; ஊழியக்காரன் தன் எஜமானைவிட மேன்மையுள்ளவன் அல்ல” (மத்தேயு 10:24). அதாவது, நம்ம “எருசலேமுக்கு” போற வழியில கர்த்தருக்கு நடந்த அதே விஷயங்கள்தான் நமக்கும் நடக்கும். நம்ம மூலமா தேவனுடைய கிரியைகள் வெளிப்படும். ஜனங்களும் ஆசீர்வாதம் அடைவாங்க. ஒருசிலர் நன்றிகாட்டுவாங்க. மற்றவர்கள் முழு நன்றியின்மையைக் காட்டுவாங்க. ஆனாலும் எதுவுமே நம்மளை “நம்ம எருசலேமுக்கு” போறதிலிருந்து திசைதிருப்பக் கூடாது.

“…அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்…” (லூக்கா 23:33). நம்ம கர்த்தர் எருசலேமை அடைஞ்சப்போ அப்படித்தான் நடந்தது. அந்த நிகழ்ச்சிதான் நம்ம இரட்சிப்புக்கான வாசல். ஆனா பரிசுத்தவான்கள் சிலுவையில முடிவதில்லை; கர்த்தருடைய கிருபையால் அவர்கள் மகிமையில முடிவாங்க. இதற்கிடையில நம்ம ஒவ்வொருத்தரும், “நானும் ‘எருசலேமுக்குப்’ போறேன்”னு சொல்றதே நம்ம watchword-ஆ இருக்கட்டும்.

உன்னதப்பாட்டு 1-3; கலாத்தியர் 2


ஆஸ்வால்டின் ஞானம்

தேவன் நம்ம சூழ்நிலைகளுக்கு எதிரா நம்ம ஆவிக்குரிய வாழ்க்கையை வளர்க்க மாட்டார். நம்ம சூழ்நிலைகளிலேயே, அவற்றின் மூலமாவே அதை வளர்க்கிறார். எங்கே போறோம்னு தெரியாமலே, 900 L