“நான் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறேன். எனவே நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெறலாம். உங்கள் மகிழ்ச்சி முழுமையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
“என் சந்தோஷம்… உங்கள் சந்தோஷம்”
இயேசுவுக்கு இருந்த சந்தோஷம் என்ன? சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. சொல்லப்போனால், இயேசு கிறிஸ்துவை மகிழ்ச்சி என்ற வார்த்தையோடு சேர்த்து பேசுவதையே அவருக்குச் செய்கிற அவமரியாதை. இயேசுவின் சந்தோஷம் என்பது அவர் தம்முடைய பிதாவுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்ததிலும், தியாகம் செய்ததிலும் இருந்தது. பிதா எதைச் செய்யச் சொன்னாரோ, அதைச் செய்வதே அவருடைய சந்தோஷமாக இருந்தது. “அவர் தமக்கு முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்திற்காகச் சிலுவையைச் சகித்தார்…” (எபிரெயர் 12:2). “என் தேவனே, உம்முடைய சித்தத்தைச் செய்ய நான் விரும்புகிறேன்…” (சங்கீதம் 40:8). இயேசுவுடைய அதே சந்தோஷம் நம்மிலும் நிறைவடைய வேண்டும் என்று அவர் ஜெபித்தார். இயேசு கிறிஸ்து தம்முடைய சந்தோஷத்தை எனக்குள் அறிமுகப்படுத்த நான் அனுமதித்தேனா?
ஒரு முழுமையான, நிறைந்த வாழ்க்கை என்பது உடல் ஆரோக்கியத்திலோ, சூழ்நிலைகளிலோ, ஏன் தேவனுடைய வேலை வெற்றி பெறுவதிலோ கூட இல்லை. அது தேவனைச் சரியாகப் புரிந்துகொள்வதிலும், இயேசு அனுபவித்த அதே ஐக்கியத்திலும், அவரோடு ஒன்றித்திருப்பதிலும் இருக்கிறது. ஆனால், இந்தச் சந்தோஷத்தைத் தடுக்கும் முதல் காரியம், நம்முடைய சூழ்நிலைகளைப் பற்றி அதிகமாக நினைப்பதால் வரும் மென்மையான எரிச்சல்தான். இயேசு சொன்னார், “…உலகத்தின் கவலைகள்… வசனத்தை நெருக்கிப்போடும்; அது பயனற்றுப் போகும்” (மாற்கு 4:19). என்ன நடக்கிறது என்பதே தெரியுமுன், நாம் கவலைகளுக்குள் சிக்கிக்கொள்கிறோம். தேவன் நமக்காகச் செய்தவை எல்லாம் வெறும் நுழைவாயில்தான். நாம் அவருடைய சாட்சிகளாக இருந்து, இயேசு யார் என்பதை அறிவிக்கிற இடத்துக்கு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
தேவனோடு சரியான உறவில் இருங்கள், அங்கே உங்கள் சந்தோஷத்தைக் கண்டுகொள்ளுங்கள். அப்போது உங்களிலிருந்து “ஜீவத்தண்ணீர் ஆறுகள் ஓடும்” (யோவான் 7:38). இயேசு தம்முடைய “ஜீவத்தண்ணீரை” ஊற்றும் ஒரு ஊற்றாக இருங்கள். உங்களைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு, வெளிவேஷமும் பெருமையும் நிறைந்த வாழ்க்கையை விடுங்கள். “உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறபடியால்” (கொலோசெயர் 3:3) அந்த வாழ்க்கையை வாழுங்கள். தேவனோடு சரியான உறவு வைத்திருக்கிற ஒருவர், எங்கே போனாலும் சுவாசிப்பதைப் போல இயல்பாக வாழ்வார். உங்களுக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருந்தவர்கள், தாங்களே மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததை உணராமலேயே வாழ்ந்தவர்கள்தான்.
சங்கீதம் 132-134; 1 கொரிந்தியர் 11:17-34
ஆஸ்வால்டின் ஞானமொழிகள்
முந்தைய நிகழ்வுகளை வைத்து வாதிடுவது எளிது. அது எல்லாவற்றையும் எளிமையாக்கிவிடும். ஆனால் அது ஆபத்தானது. தேவனுக்குச் சுதந்திரமாக இடம் கொடுங்கள்; அவர் விரும்புகிறபடி அவருடைய உலகத்துக்குள் அவர் வரட்டும். தேவன் செயல்படும் விதத்தை மத சம்பந்தமான மனிதர்களுக்கோ அல்லது சில குறிப்பிட்ட முறைகளுக்கோ மட்டும் நாம் கட்டுப்படுத்தினால், நாமே தேவனுக்கு இணையாக நம்மை நினைத்துக்கொள்கிறவர்களாகிவிடுவோம். Baffled to Fight Better, 51 L
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.