“மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைக் கண்டனர். மத போதகர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்களிடம் வினா எழுப்புவதுமாக இயேசு தேவாலயத்திற்குள் அமர்ந்திருந்தார்.”
பிதாவின் இல்லத்தில் ஜெபம்
நம்முடைய ஆண்டவரின் குழந்தைப் பருவம் என்பது அவர் பெரியவராக வளர்ந்து வருவதற்காகக் காத்திருந்த ஒரு முதிர்ச்சியற்ற காலம் கிடையாது — அவருடைய குழந்தைப் பருவம் ஒரு நித்திய உண்மை. என் ஆண்டவரோடும் இரட்சகரோடும் என்னை இணைத்ததன் விளைவாக, நான் தேவனுடைய பரிசுத்தமான, கள்ளங்கபாடற்ற பிள்ளையா இருக்கிறேனா? நான் என் வாழ்க்கையை என் பிதாவின் இல்லத்தில் இருக்கிறதுபோல பார்க்கிறேனா? தேவனுடைய குமாரன் எனக்குள்ளே, தம்முடைய பிதாவின் இல்லத்தில் வாழ்கிறாரா?
என்றும் நிலைத்திருக்கிற ஒரே உண்மை தேவன் மட்டும்தான். அவருடைய ஒழுங்கு ஒவ்வொரு நொடியும் எனக்குக் கிடைக்கிறது. நான் எப்போதும் தேவனுடைய உண்மையோடு தொடர்பில் இருக்கிறேனா, அல்லது என் வாழ்க்கையில் ஏதாவது குழப்பம் வந்தால்தான், எல்லாம் சரியில்லாமல் போகும்போதுதான் ஜெபிக்கிறேனா? நம்மில் சிலர் இன்னும் கற்றுக்கொள்ளவே தொடங்காத பரிசுத்த ஐக்கியத்திலும் ஒருமையிலும், என் ஆண்டவரோடு என்னை நெருக்கமாக இணைத்துக்கொள்ள நான் கற்றுக்கொள்ள வேண்டும். “…நான் என் பிதாவின் காரியங்களில் இருக்க வேண்டும்” — அதோடு, என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் என் பிதாவின் இல்லத்தில் வாழவும் நான் கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களுடைய சொந்த சூழ்நிலைகளைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஆண்டவருடைய வாழ்க்கையோடு எவ்வளவு நெருக்கமாக இணைந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் தேவனுடைய ஒரு எளிய பிள்ளையாக, அவரோடு எப்போதும் பேசிக்கொண்டு, எல்லாமே அவருடைய கரங்களிலிருந்துதான் வருகிறது என்று உணர்ந்து வாழ்கிறீர்களா? உங்களுக்குள்ளே இருக்கும் அந்த நித்திய பிள்ளை தம்முடைய பிதாவின் இல்லத்தில் வாழ்கிறாரா? பிறருக்குச் சேவை செய்த அவருடைய கிருபைமிக்க வாழ்க்கை, உங்கள் வீட்டிலும், உங்கள் தொழிலிலும், உங்கள் நண்பர்கள் வட்டத்திலும் உங்கள் மூலமாக வெளிப்படுகிறதா? நீங்கள் ஏன் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கடந்து செல்கிறீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், நீங்கள் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அது, பிதாவின் தெய்வீக சித்தத்தின்படி உங்கள் வாழ்க்கைக்குள் வரும் தேவனுடைய குமாரனோடு உங்களுக்குள்ள உறவினால்தான். நீங்கள் அவரோடு முழுமையான ஒருமையில் நிலைத்திருந்து, அவர் தம்முடைய விருப்பப்படி உங்களை நடத்த அனுமதிக்க வேண்டும்.
உங்களுடைய ஆண்டவரின் வாழ்க்கையே உங்களுடைய முக்கியமான, எளிய வாழ்க்கையாக மாற வேண்டும். அவர் இந்த பூமியில் இருந்தபோது மக்களிடையே எப்படி கிரியை செய்து வாழ்ந்தாரோ, அதேபோலத்தான் அவர் உங்களுக்குள்ளும் கிரியை செய்து வாழ வேண்டும்.
சங்கீதம் 72-73; ரோமர் 9:1-15
ஆஸ்வால்டின் ஞானம்
மனித உறவுகளில் இயேசுவைப் போல ஆழமான அன்பை யாரும் காட்டியிருக்க முடியாது; இருந்தாலும், அவர்மேல் நாம் காட்ட வேண்டிய அன்போடு ஒப்பிட்டால், தாயையும் தந்தையையும் நேசிப்பது வெறுப்புபோல இருக்க வேண்டும் என்று சில நேரங்களில் அவர் சொல்கிறார். அப்படியே நான் உங்களை அனுப்புகிறேன், 1301 L
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.