“உலகத்துல உங்களுக்கு கஷ்டங்கள் வரத்தான் செய்யும். ஆனா தைரியமா இருங்க. நான் இந்த உலகத்தையே ஜெயிச்சிட்டேன்.”
கஷ்டங்கள் கற்றுக்கொடுக்கும் பாடம்
கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் எல்லா துன்பங்களிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைப்பது என்று தான் பொதுவாக எல்லாரும் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அதன் அர்த்தம், துன்பங்களுக்கு நடுவிலும் நமக்கு விடுதலை கிடைப்பது தான். இது முற்றிலும் வேறான ஒரு விஷயம். “உன்னதமானவருடைய மறைவிடத்தில் வாசம் செய்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். உனக்கு ஒரு பொல்லாப்பும் நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது…” (சங்கீதம் 91:1,10) — இது நீங்கள் தேவனோடு ஒன்றாய் இருக்கும் இடம்.
நீங்கள் தேவனுடைய பிள்ளையாக இருந்தால், உங்களுக்கு நிச்சயமாக துன்பங்கள் வரும். ஆனால் அவை வரும்போது நீங்கள் ஆச்சரியப்படக்கூடாது என்று இயேசு சொல்கிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.” அவர் சொல்கிறார், “நீங்கள் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.” இரட்சிக்கப்பட்டதற்கு முன்னாடி தங்களுடைய துன்பங்களைப் பற்றி பேசக்கூட தயங்கிய அதே மனிதர்கள் தான், மறுபடியும் பிறந்த பிறகு அடிக்கடி புலம்பவும் கவலைப்படவும் செய்கிறார்கள். ஏனென்றால், ஒரு பரிசுத்தவானாக வாழ்வது என்றால் என்ன என்பதைப் பற்றி அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
தேவன் நமக்கு எல்லாவற்றையும் ஜெயித்த வாழ்க்கையை உடனே தருவதில்லை—நாம் ஜெயித்துக்கொண்டே போகும்போது தான் அவர் நமக்கு ஜீவனைத் தருகிறார். வாழ்க்கையின் அழுத்தங்கள் தான் நம்முடைய பெலனை உருவாக்குகின்றன. எந்த அழுத்தமும் இல்லையென்றால், பெலனும் இருக்காது. நீங்கள் தேவனிடம் ஜீவனையும், விடுதலையையும், சந்தோஷத்தையும் கேட்கிறீர்களா? அந்த அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இல்லையென்றால், அவரால் அதை உங்களுக்குத் தர முடியாது. ஆனால், நீங்கள் அந்த அழுத்தத்தை எதிர்கொண்ட உடனே, உங்களுக்குத் தேவையான பெலன் உடனே கிடைத்துவிடும். உங்களுடைய பயத்தை வென்று, முதல் அடியை எடுத்து வையுங்கள். அப்போது தேவன் உங்களுக்குப் போஷாக்கு அளிப்பார்— “ஜெயங்கொள்ளுகிறவனுக்கு ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்…” (வெளிப்படுத்தல் 2:7). உங்களை நீங்கள் சரீரப்பிரகாரமாக முழுமையாக அர்ப்பணிக்கும்போது சோர்ந்து போய்விடுவீர்கள். ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாக உங்களை அர்ப்பணிக்கும்போது, உங்களுக்கு இன்னும் அதிகமான பெலன் கிடைக்கும். தேவன் நமக்கு நாளைக்கான பெலனையோ, அடுத்த ஒரு மணிநேரத்திற்கான பெலனையோ எப்போதும் தருவதில்லை; மாறாக, இந்த நிமிடம் நாம் சந்திக்கும் போராட்டத்திற்குத் தேவையான பெலனை மட்டுமே தருகிறார். நம்முடைய சொந்த அறிவை வைத்து துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதே நமக்கு வரும் சோதனை. ஆனால், துன்பங்களால் நாம் தோற்றுப்போனது போல் தோன்றினாலும், ஒரு பரிசுத்தவானால் “சந்தோஷமாக” இருக்க முடியும். ஏனென்றால், தேவனைத் தவிர வேறு யாருக்கும் சாத்தியமே இல்லை என்று தோன்றும் காரியத்திலும் அவரால் மட்டுமே வெற்றியைத் தர முடியும்.
ஆஸ்வால்டிடமிருந்து சில ஞான வார்த்தைகள்
நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று நாம் பிரசங்கம் செய்யக் கூடாது; நற்கிரியைகள் பிரசங்கிக்கப்பட வேண்டியவை அல்ல, அவை செய்யப்பட வேண்டியவை. So Send I You, 1330 L
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.