“ஆறு நாட்களுக்குப் பின், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு அழைத்துக்கொண்டு உயரமான மலை உச்சிக்குச் சென்றார். அவர்கள் அங்கே தனியே இருந்தனர். சீஷர்கள் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் புதிய ரூபம் அடைந்தார்.”
உயர்த்தப்படும் இடம் – ஆஸ்வால்டு சேம்பர்ஸ்
நாம் எல்லோரும் மலையின் மேல் உயர்த்தப்பட்ட தருணங்களை அனுபவித்திருப்போம். அப்போது காரியங்களை தேவனுடைய பார்வையில் பார்த்து, அங்கேயே தங்கிவிட வேண்டும் என்றும் ஆசைப்பட்டிருப்போம். ஆனால் தேவன் நம்மை அங்கேயே தங்க அனுமதிக்க மாட்டார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் உண்மையான சோதனை என்னவென்றால், அந்த மலையிலிருந்து கீழே இறங்கும் வல்லமையை காட்டுவது தான். நமக்கு மேலே போவதற்கு மட்டுமே வல்லமை இருக்கிறது என்றால், ஏதோ தவறு இருக்கிறது. தேவனோடு மலையின் மேல் இருப்பது ஒரு அற்புதமான விஷயம் தான். ஆனால் ஒருவர் பிறகு கீழே இறங்கி, பள்ளத்தாக்கில் இருக்கும் பிசாசு பிடித்த மக்களைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காகத் தான் அங்கே போகிறார் (மாற்கு 9:14-18 பாருங்கள்). நாம் மலைகளுக்காகவோ, சூரிய உதயங்களுக்காகவோ அல்லது வாழ்க்கையின் பிற அழகிய விஷயங்களுக்காகவோ படைக்கப்படவில்லை. அவை வெறும் ஊக்கமளிக்கும் தருணங்களாக மட்டுமே இருக்க வேண்டும். நாம் பள்ளத்தாக்கிற்காகவும் வாழ்க்கையின் சாதாரண காரியங்களுக்காகவும் தான் படைக்கப்பட்டிருக்கிறோம். அங்கே தான் நம்முடைய சகிப்புத்தன்மையையும் பலத்தையும் நாம் நிரூபிக்க வேண்டும். இருந்தாலும், நம்முடைய ஆவிக்குரிய சுயநலம் எப்போதும் மலையின் மேலேயே திரும்பத் திரும்ப இருக்க ஆசைப்படுகிறது. நாம் மலையுச்சியிலேயே தங்கியிருக்க முடிந்தால், பூரணமான தூதர்களைப் போல பேசவும் வாழவும் முடியும் என்று நினைக்கிறோம். அந்த உயர்த்தப்பட்ட நேரங்கள் அரிதானவை. தேவனுடனான நம் வாழ்க்கையில் அவற்றுக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் நம்முடைய ஆவிக்குரிய சுயநலம் அவற்றையே ஒரே நேரமாக மாற்ற நினைப்பதைத் தடுக்க நாம் கவனமாக இருக்க வேண்டும்.
நமக்கு நடக்கும் எல்லாவற்றையும் பயனுள்ள போதனையாக மாற்ற வேண்டும் என்று நினைக்க நாம் சாய்கிறோம். உண்மையில், அது போதனையை விட மேலான ஒன்றாக, அதாவது குணமாக மாற வேண்டும். மலையுச்சி நமக்கு எதையும் கற்றுக்கொடுப்பதற்காக அல்ல. அது நம்மை ஒரு புதிய மனிதனாக உருவாக்குவதற்காகத் தான் இருக்கிறது. “இந்த அனுபவத்தால் என்ன பயன்?” என்று எப்போதும் கேட்பதில் ஒரு பயங்கரமான கண்ணி இருக்கிறது. ஆவிக்குரிய காரியங்களை நாம் ஒருபோதும் அப்படி அளவிட முடியாது. மலையுச்சியில் இருக்கும் தருணங்கள் அரிதானவை. தேவனுடைய நோக்கத்தில் அவை ஏதோவொரு காரியத்திற்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
ஏசாயா 11-13; எபேசியர் 4
ஆஸ்வால்டிலிருந்து ஞானம்
ஒரு கிறிஸ்தவன் தான் வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையைப் பற்றி கொண்டிருக்க வேண்டிய மனப்பான்மை என்னவென்றால், அதற்குப் பின்னால் தேவன் தம்முடைய சொந்த நோக்கங்களுக்காக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதே ஆகும். விவிலிய ஒழுக்கவியல், 99 R
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.