“தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம்.”
நீங்களே செய்யுங்க (2)
மற்ற காரியங்களை உறுதியோடு கட்டுப்படுத்துங்கள். பரிசுத்தவான்களுடைய கடினமான வாழ்க்கையின் இன்னொரு சவாலான பகுதி இது. பவுல், இந்த வசனத்துக்கான மொஃபாட் (Moffatt) மொழிபெயர்ப்பின்படி இப்படிச் சொல்கிறார்: “…கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படி ஒவ்வொரு திட்டத்தையும் நான் சிறைப்பிடிக்கிறேன்….” இன்றைக்கு பல கிறிஸ்தவ வேலைகள் கட்டுப்படுத்தப்படவே இல்லை. அவை வெறுமனே ஒரு உந்துதலால் உருவானவை! நம்முடைய ஆண்டவருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு திட்டமும் அவருடைய பிதாவின் சித்தத்துக்குக் கீழ் கட்டுப்படுத்தப்பட்டது. அவருடைய பிதாவின் சித்தத்துக்கு மாறாக, தம்முடைய சொந்த விருப்பத்தின் உந்துதலைப் பின்பற்ற வேண்டும் என்ற மிகச் சிறிய எண்ணம்கூட அவருக்கு இல்லை — “குமாரன் தம்மாலே ஒன்றும் செய்யமாட்டார்…” (யோவான் 5:19). இதை நாம் செய்கிறதோடு ஒப்பிட்டுப் பாருங்கள் — கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படி நம்மை நாமே சிறைப்பிடித்து கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, உந்துதலால் வரும் “ஒவ்வொரு எண்ணத்தையும்” அல்லது திட்டத்தையும் உடனே செயல்படுத்தி விடுகிறோம்.
இன்றைக்கு கிறிஸ்தவர்களுக்கான நடைமுறை வேலைகளுக்கு அளவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், “ஒவ்வொரு எண்ணத்தையும் [திட்டத்தையும்] சிறைப்பிடிக்கிற” பரிசுத்தவான்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். “அவர்களுக்கு உறுதி இல்லை; தேவனுக்காகவும் மற்றவர்களின் ஆத்துமாக்களுக்காகவும் வைராக்கியம் இல்லை” என்று அவர்களிடம் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான உறுதியும் வைராக்கியமும், தேவனுக்குக் கீழ்ப்படிவதில்தான் இருக்கிறது. அவ்வாறு நம்முடைய ஒழுங்கற்ற மனித சுபாவத்திலிருந்து எழும் சேவை ஆசையில் இல்லை. பரிசுத்தவான்கள் “ஒவ்வொரு எண்ணத்தையும் [திட்டத்தையும்] சிறைப்பிடிக்காமல்,” தங்கள் சொந்த மனித சுபாவத்தால் தூண்டப்பட்டு தேவனுக்காகவே வேலை செய்கிறார்கள் என்பது நம்ப முடியாததாக இருந்தாலும், அதுதான் உண்மை. அந்த வேலை உறுதியான கட்டுப்பாட்டின் மூலம் ஆவிக்குரியதாக மாற்றப்படவே இல்லை.
ஒரு மனிதன் இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர் மட்டுமல்ல; தேவன், உலகம், பாவம், பிசாசு ஆகியவற்றைப் பற்றிய இயேசு கிறிஸ்துவின் பார்வைக்கும் அவர் அர்ப்பணிக்கப்பட்டவரும், பொறுப்புள்ளவரும், கணக்குக்கொடுக்க வேண்டியவரும் என்பதைக் குறித்து நாம் மறந்துவிடும் ஒரு போக்கு நமக்கு இருக்கிறது. இதன் பொருள், ஒவ்வொருவரும் “தன் மனம் புதிதாகும்படி மறுரூபமாக வேண்டும்….” (ரோமர் 12:2) என்ற பொறுப்பை உணர வேண்டும்.
நீதிமொழிகள் 6-7; 2 கொரிந்தியர் 2
ஆஸ்வால்டிடமிருந்து ஞானம்
விசுவாசத்துக்கு தன்னை எங்கே கொண்டு போகிறார்கள் என்று தெரியாது. ஆனால் தன்னை நடத்துகிறவரை அது நேசிக்கிறது; அவரை அறிந்தும் இருக்கிறது. My Utmost for His Highest, மார்ச் 19, 761 L
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.