“உலகத்திலிருந்து சில ஆட்களை நீர் எனக்குக் கொடுத்தீர். நான் அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள். அவர்களை எனக்குத் தந்தீர். அவர்கள் உமது போதனைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.”
அவருடையது!
“நீங்கள் உங்களுக்கே சொந்தமானவர்கள் இல்லை” (1 கொரிந்தியர் 6:19) என்ற உணர்வை பரிசுத்த ஆவியானவர் ஒருவருக்குள்ளே கொண்டு வந்திருந்தால், அவர்தான் ஒரு மிஷனரி. “நான் எனக்குச் சொந்தமானவன் இல்லை” என்று சொல்வது, என் ஆவிக்குரிய வளர்ச்சியில் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருப்பதைக் காட்டுகிறது. அன்றாட வாழ்க்கையில் வரும் குழப்பங்களுக்கு நடுவிலும், அந்த வாழ்க்கையின் உண்மையான தன்மை எப்படி தெரியும் தெரியுமா? ஒரு உறுதியான முடிவை எடுத்து, என்னையே இன்னொருவருக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கும்போதுதான் அது வெளிப்படுகிறது. அந்தவர் வேறு யாரும் இல்லை, இயேசு கிறிஸ்துவே. என்னை என் ஆண்டவரோடு ஒன்றாக்குவதற்காகவே பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் தன்மையை எனக்கு விளக்கி புரிய வைக்கிறார். வெறும் அவருடைய காட்சிப்பெட்டிக்குள்ள வைக்கப்படும் ஒரு பரிசுப் பொருளாக நான் இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. நம்முடைய ஆண்டவர் தாம் தம்முடைய சீஷர்களுக்காக செய்ததைக் கொண்டு அவர்களை ஒருபோதும் அனுப்பவில்லை. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் சீஷர்கள் இயேசு உண்மையிலேயே யார் என்பதைப் புரிந்துகொண்டதற்குப் பிறகுதான், அவர், “போங்கள்” என்றார் (மத்தேயு 28:19; லூக்கா 24:49; அப்போஸ்தலர் 1:8-ஐயும் பாருங்கள்).
“என்னிடத்தில் வருகிற ஒருவன் தன் பிதாவையும் தாயையும், மனைவியையும் பிள்ளைகளையும், சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் சொந்த ஜீவனையும் கூட வெறுக்காவிட்டால், அவன் என் சீஷனாக இருக்க முடியாது” (லூக்கா 14:26). அந்த நபர் நல்லவராகவும் நேர்மையானவராகவும் இருக்க முடியாது என்று அவர் சொல்லவில்லை. ஆனால், இயேசு அவர்மேல் “என்னுடையவன்” என்று எழுத முடியாத ஒருவர் என்பதைத்தான் சொல்லுகிறார். இந்த வசனத்தில் நம்முடைய ஆண்டவர் குறிப்பிடும் எந்த உறவும், அவரோடு நமக்குள்ள உறவுக்கு போட்டியாக வரலாம். நான் என் தாய்க்கு, அல்லது என் மனைவிக்கே, அல்லது எனக்கே சொந்தமானவனாக இருக்க விரும்பலாம். ஆனால் அப்படி இருந்தால், “நீங்கள் என் சீஷனாக இருக்க முடியாது” என்றுதான் இயேசு சொல்கிறார். இதனால் எனக்கு இரட்சிப்பு கிடைக்காது என்பதல்ல. ஆனால், நான் முழுமையாக அவருக்குச் சொந்தமானவனாக இருக்க முடியாது என்பதுதான் அர்த்தம்.
நம்முடைய ஆண்டவர் தம்முடைய சீஷனைத் தமக்கே சொந்தமானவனாக ஆக்கி, அவனுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார். “…எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்…” (அப்போஸ்தலர் 1:8). ஒரு சீஷனுக்குள் வரும் ஆசை, இயேசுவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதல்ல. அவருக்கு முழு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான். மிஷனரியின் ரகசியம் என்னவென்றால், “நான் அவருக்குச் சொந்தமானவன், அவர் தம்முடைய கிரியைகளையும் தம்முடைய திட்டங்களையும் என்னை வைத்து நிறைவேற்றுகிறார்” என்று உண்மையாய் சொல்லக்கூடியதாக இருப்பதுதான்.
முழுமையாக அவருக்குச் சொந்தமாகுங்கள்!
சங்கீதம் 143-145; 1 கொரிந்தியர் 14:21-40
ஒஸ்வால்டிடமிருந்து ஞானம்
தேவனில் உள்ள விசுவாசத்தின் பெரிய விஷயம் என்னவென்றால், குழப்பங்களின் நடுவிலும் ஒரு மனிதனை கலங்காமல் வைத்திருக்கிறது. ஏசாயா குறிப்புகள், 1376 R
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.