Luke 11:1
“ஒருமுறை இயேசு ஓரிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். இயேசு பிரார்த்தனையை முடித்தபோது இயேசுவின் சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி, “யோவான் தன் சீஷர்களுக்குப் பிரார்த்தனை செய்வது எவ்வாறு என்று கற்பித்தான். ஆண்டவரே எங்களுக்கும் பிரார்த்தனை செய்ய நீர் கற்றுக்கொடும்” என்றான்.”
Daily Devotionals
NEW MERCIES

ஜெபத்தின் நோக்கம்

ஆவணி 26, 20262 நிமிட வாசிப்பு

ஜெபம் இயல்பான மனுஷனுடைய வாழ்க்கையின் சாதாரண பகுதி கிடையாது. ஒரு மனுஷன் ஜெபிக்கவில்லை என்றால் அவனுடைய வாழ்க்கை கஷ்டப்படும் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதை நான் சந்தேகமாகப் பார்க்கிறேன். கஷ்டப்படுவது அவனுக்குள் இருக்கும் தேவ குமாரனுடைய ஜீவன்தான். அது உணவால் அல்ல, ஜெபத்தால் தான் போஷிக்கப்படுகிறது. ஒரு மனுஷன் மேலிருந்து மறுபடியும் பிறக்கும்போது, தேவ குமாரனுடைய ஜீவன் அவனுக்குள் பிறக்கிறது. அப்போ அவன் அந்த ஜீவனை பசியால் வாட விடலாம் அல்லது போஷிக்கலாம். நமக்குள் இருக்கும் தேவனுடைய ஜீவனை போஷிக்கும் வழி ஜெபம்தான். ஜெபத்தைப் பற்றிய நம்முடைய சாதாரண எண்ணங்கள் புதிய ஏற்பாட்டில் காணப்படுவதில்லை. நாம் ஜெபத்தை நமக்கு வேண்டிய காரியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாக மட்டும் பார்க்கிறோம். ஆனால் ஜெபத்தின் வேதாகமப் பொருள் தேவன் தாமே யார் என்பதை நாம் அறிந்துகொள்வதுதான்.

“கேளுங்கள், அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள்…” (யோவான் 16:24). நாம் தேவனுக்கு முன்பாக குறை சொல்லுகிறோம். சில நேரங்களில் அவரிடம் மன்னிப்பு கேட்கிறோம் அல்லது அவரை அலட்சியப்படுத்துகிறோம். ஆனாலும் உண்மையில் அவரிடம் நாம் மிகக் குறைவான விஷயங்களையே கேட்கிறோம். ஆனால் ஒரு குழந்தை கேட்பதில் அற்புதமான தைரியத்தை காட்டுகிறது! நம்முடைய கர்த்தர் சொன்னார், “…நீங்கள்…சிறு பிள்ளைகளைப் போல ஆகாவிட்டால்…” (மத்தேயு 18:3). கேளுங்கள், தேவன் செய்வார். இயேசு கிறிஸ்துவுக்கு செயல்பட வாய்ப்பும் இடமும் கொடுங்கள். பிரச்சனை என்னவென்றால், ஒரு மனிதனுக்கு எல்லாம் முடிந்துபோய், கையறுநிலை வரும்வரை யாரும் இதை செய்ய மாட்டார்கள். ஒருவருக்கு கையறுநிலை வந்துவிட்டால், ஜெபிப்பது கோழைத்தனம் மாதிரி தோன்றாது. உண்மையில், அப்போதுதான் தேவனுடைய சத்தியத்தையும் யதார்த்தத்தையும் தொடும் ஒரே வழி அதுதான். தேவனுக்கு முன்பாக நீங்களாகவே இருங்கள். உங்களை கையறுநிலைக்கு கொண்டு வந்த பிரச்சனைகளை அவரிடம் சொல்லுங்கள். ஆனால் நீங்கள் உங்களுக்கு எல்லாம் போதும் என்று நினைக்கும் வரை, தேவனிடம் எதையும் கேட்க வேண்டியதில்லை.

“ஜெபம் காரியங்களை மாற்றுகிறது” என்று சொல்வதை விட, “ஜெபம் என்னை மாற்றுகிறது. பிறகு நான் காரியங்களை மாற்றுகிறேன்” என்று சொல்வதுதான் உண்மைக்கு நெருக்கமானது. மீட்பின் அடிப்படையில், ஜெபம் ஒரு மனிதன் காரியங்களைப் பார்க்கும் விதத்தை மாற்றும்படி தேவன் இப்படியே ஏற்படுத்தியிருக்கிறார். ஜெபம் என்பது வெளிப்புறக் காரியங்களை மாற்றுவது மட்டும் அல்ல. மாறாக, ஒருவருடைய உள்ளான சுபாவத்தில் அற்புதங்களைச் செய்வதுதான்.

சங்கீதங்கள் 123-125; 1 கொரிந்தியர் 10:1-18


ஓஸ்வால்டின் ஞான வார்த்தைகள்

தேவனுக்குப் பயப்படுவதிலுள்ள அற்புதமான விஷயம் என்னவென்றால், நீங்கள் தேவனுக்குப் பயப்படும்போது வேறு எதற்கும் பயப்பட மாட்டீர்கள். ஆனால் நீங்கள் தேவனுக்குப் பயப்படவில்லை என்றால், வேறு எல்லாவற்றிற்கும் பயப்படுவீர்கள். “கர்த்தருக்குப் பயப்படுகிற ஒவ்வொருவனும் பாக்கியவான்”;… மிக உயர்ந்த நன்மை — பயணியின் பாடல் புத்தகம், 537 L