John 15:15
“இனி நான் உங்களை வேலைக்காரன் என்று அழைப்பதில்லை. ஏனெனில் வேலைக்காரன் தன் எஜமானன் செய்வதை அறியமாட்டான். நான் இப்பொழுது உங்களை நண்பர்கள் என்றே அழைக்கிறேன். ஏனென்றால் என் பிதா எனக்குச் சொன்னவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.”
Daily Devotionals
NEW MERCIES

தியாகமும் நட்பும்

ஆவணி 25, 20262 நிமிட வாசிப்பு

நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை முழுமையாக ஒப்படைக்கிற வரைக்கும், சுயதியாகத்தின் சந்தோஷத்தை நம்மால் ஒருபோதும் அறிய முடியாது. ஆனாலும், நம்மை முழுவதுமாக ஒப்படைப்பதுதான் நமக்கு மிகக் கஷ்டமான விஷயம். “ஒருவேளை… என்றால் நான் ஒப்படைப்பேன்!” என்று சொல்லி நாம் அதற்கு நிபந்தனை போடுகிறோம். அல்லது, “நான் என் வாழ்க்கையை தேவனுக்காக அர்ப்பணிக்கணும் போலிருக்கிறது” என்று சொல்லி அதை அணுகுகிறோம். இந்த இரண்டு வழிகளிலும் சுயதியாகத்தின் சந்தோஷத்தை நம்மால் ஒருபோதும் காண முடியாது.

ஆனால், நாம் இயேசுவிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்கும் தருணத்திலேயே, பரிசுத்த ஆவியானவர் அவருடைய சந்தோஷத்தின் ஒரு சுவையை நமக்குக் கொடுக்கிறார். சுயதியாகத்தின் இறுதி நோக்கம், நம்முடைய நண்பருக்காக நம்முடைய ஜீவனையே விடுவதுதான் (யோவான் 15:13-14 பார்க்கவும்). பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கைக்குள் வரும்போது, இயேசுவுக்காக நம்முடைய ஜீவனையே விட வேண்டும் என்பதுதான் நம்முடைய மிகப்பெரிய ஆசையாக இருக்கும். ஆனாலும், தியாகம் செய்கிறோம் என்ற எண்ணமே மனதிற்கு வராது. ஏனென்றால் தியாகம் என்பது பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தும் அன்பின் உச்சம்.

நம்முடைய ஆண்டவர், சுயதியாக வாழ்க்கைக்கு நமக்கான உதாரணம். “என் தேவனே, உம்முடைய சித்தத்தைச் செய்வதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்…” என்று சங்கீதம் 40:8-ல் சொல்லப்பட்டதை அவர் முழுமையாக வெளிப்படுத்தினார். அவர் மிகப் பெரிய தனிப்பட்ட தியாகங்களைச் சகித்தார். ஆனாலும், அதை பொங்கி வழியும் மகிழ்ச்சியோடு செய்தார். நான் என்னை முழுமையாக இயேசு கிறிஸ்துவுக்குச் சரணடைந்திருக்கிறேனா? வழிகாட்டுதலுக்கும் திசை காட்டுதலுக்கும் நான் அவரையே நோக்கிப் பார்க்கவில்லை என்றால், என் தியாகத்தால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், என் கண்கள் அவர்மேல் நிலைத்திருக்கும்போது நான் செய்கிற தியாகம், மெதுவாகவும் நிச்சயமாகவும் அவருடைய வடிவமைக்கும் தாக்கம் என் வாழ்க்கையில் வெளிப்படச் செய்யும் (எபிரெயர் 12:1-2 பார்க்கவும்).

உங்களுடைய இயல்பான ஆசைகள், தேவனுக்கு முன்பாக அன்பில் நடக்கிற உங்கள் பயணத்துக்கு இடையூறாக இருக்க விடாதீர்கள். இயல்பான ஆசைகளின் மேல் அன்பைக் கட்டியெழுப்புவதால் ஏற்படும் நிராகரிப்புதான், இயல்பான அன்பை அழிக்கிற மிகக் கொடூரமான வழிகளில் ஒன்று. ஆனால் ஒரு பரிசுத்தவானின் ஒரே உண்மையான ஆசை ஆண்டவர் இயேசு தான். தேவனுக்கான அன்பு என்பது வெறும் உணர்ச்சிப் பக்கம் சார்ந்தது அல்ல. ஒரு பரிசுத்தவான் தேவன் அன்பு செய்கிறபடியே அன்பு செய்வது தான், நினைக்கக்கூடிய அளவில் மிக நடைமுறைமான விஷயம்.

“நான் உங்களை நண்பர்கள் என்று அழைத்தேன்….” இயேசுவுடன் நம்முடைய நட்பு, அவர் நமக்குள் உருவாக்கிய புதிய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அந்த வாழ்க்கைக்கு நம்முடைய பழைய வாழ்க்கையுடன் எந்த ஒற்றுமையும் இல்லை. அதற்கு எந்த ஈர்ப்பும் இல்லை. அது தேவனுடைய வாழ்க்கைக்கே ஈர்க்கப்படுகிற ஒன்று. அது முழுக்க முழுக்க தாழ்மையும், தூய்மையும், தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமான வாழ்க்கை.

சங்கீதம் 119:1-88; 1 கொரிந்தியர் 7:20-40


ஆஸ்வால்டிலிருந்து ஞானம்

அடிப்படையில் நாம் முழுமையான சுதந்திரத்தில் இல்லை; வெளிப்புற சூழ்நிலைகள் நம்முடைய கைகளில் இல்லை. அவை தேவனுடைய கைகளில்தான் இருக்கின்றன. நாம் சுதந்திரமாக இருக்கிற ஒரே விஷயம், தேவனோடு நமக்குள்ள தனிப்பட்ட உறவுதான். நாம் இருக்கும் சூழ்நிலைகளுக்கு நாம் பொறுப்பல்ல. ஆனால் அந்த சூழ்நிலைகள் நம்மை எப்படி பாதிக்க அனுமதிக்கிறோம் என்பதற்கு நாம் பொறுப்பு. அவை நம்மை அடக்க அனுமதிக்கலாம். அல்லது அவற்றின் மூலம் தேவன் நம்மை எப்படி உருவாக்க விரும்புகிறாரோ அப்படியே நம்மை மாற்ற அனுமதிக்கலாம். அவருடைய சாயலுக்கு ஒப்பாகுதல், 354 L