Matthew 8:26
“இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்குப் போதிய விசுவாசம் இல்லை” என்று கூறினார். பின்பு, இயேசு எழுந்து நின்று காற்றுக்கும் அலைகளுக்கும் ஒரு கட்டளை பிறப்பித்தார். காற்று நின்றது. கடல் மிகவும் அமைதியானது.”
Daily Devotionals
NEW MERCIES

கடவுளில் இளைப்பாறுதலின் இறையியல்

ஆவணி 12, 20262 நிமிட வாசிப்பு

நமக்கு பயம் வரும்போது, நாம செய்யக்கூடிய மிகக் குறைந்தபட்ச விஷயம் தேவனிடம் ஜெபிப்பது தான். ஆனால், தம்முடைய நாமத்தைச் சொல்லிக்கொள்கிறவர்கள் தம் மேல் ஒரு ஆழமான நம்பிக்கை வைத்திருக்கணும்னு எதிர்பார்ப்பதற்கு நம்முடைய ஆண்டவருக்கு முழு உரிமை இருக்கு. எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலும் தம் பிள்ளைகள் தம் மேல் முழு நம்பிக்கை வச்சிருக்கணும். அவர்கள் தான் மற்றவங்களுக்கு நம்பிக்கையூட்டுகிறவர்களா இருக்கணும்னு தேவன் எதிர்பார்க்கிறார். ஆனாலும், ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான் நாம தேவனை நம்புறோம். அதுக்கு அப்புறம், தேவனைப் பற்றித் தெரியாதவங்க பயந்துபோய் செய்கிற சாதாரண ஜெபங்களை நாமும் செய்ய ஆரம்பிச்சுடறோம். நமக்கு என்ன செய்றதுன்னே தெரியாம போகும்போது, அவர் மேலயோ அல்லது இந்த உலகத்தை வழிநடத்துகிற அவருடைய ஆளுகையின் மேலயோ நமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லைங்கறதைக் காட்டிடுறோம். அவருக்கு தூக்கம் வந்திருக்கிறது போல நமக்குத் தோணுது; நமக்கு முன்னால கடல்ல எழுகிற பெரிய பெரிய அலைகளைத் தவிர வேற எதையும் நம்மால பார்க்க முடியறதில்லை.

“…அற்ப விசுவாசம் உள்ளவர்களே!” என்று சொன்னபோது, சீஷர்களுக்குள்ள என்ன மாதிரி குத்தும் வலி ஓடியிருக்கும்! “நாம மறுபடியும் தவறிட்டோமே!”ன்னு அவர்கள் தங்களுக்குள் நினைத்திருப்பார்கள். நாம சந்திக்கிற பிரச்சினைகளுக்கு நடுவிலும் இயேசுவின் மேல் முழுமையான நம்பிக்கை வச்சிருந்தா, அவருடைய இருதயத்திற்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தந்திருக்க முடியும்னு நாம திடீர்னு உணரும்போது, நமக்கும் அதே மாதிரி கடுமையான வலி உண்டாகும்.

நம்முடைய வாழ்க்கையில சில நேரங்கள்ல எந்தப் புயலோ அல்லது நெருக்கடியோ இருக்காது. அப்போது மனுஷனா நம்மால என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்றோம். ஆனால், ஒரு நெருக்கடி வரும்போது தான், நாம யாரை நம்பி இருக்கிறோம்ங்கறது உடனே வெளிப்படும். நாம் தேவனை ஆராதிக்கவும், அவர் மேல் நம்பிக்கை வைக்கவும் பழகியிருந்தால், அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும், நாம் உடைந்துபோகும் நிலைக்குப் போனாலும், அவர் மேலுள்ள நம்முடைய நம்பிக்கையை மட்டும் இழக்க மாட்டோம் என்பதை அது வெளிப்படுத்தும்.

நாம பரிசுத்தமாக்குதலைப் பற்றி நிறையப் பேசிட்டிருக்கோம். ஆனா அதோட முடிவு நம்முடைய வாழ்க்கையில எப்படி இருக்கும்? அது தேவனுக்குள் அமைதியாக ஓய்ந்திருப்பதா வெளிப்படும். அதாவது அவரோடு முழுமையாக ஒன்றிணைந்திருப்பதா இருக்கும். இந்த ஒன்றிணைந்த நிலை, நம்மை அவருடைய பார்வைக்குக் குற்றமற்றவர்களாக மாற்றுவது மட்டுமல்லாமல், அவருக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியையும் தரும்.

சங்கீதம் 84-86; ரோமர் 12


ஆஸ்வால்டின் ஞானம்

தேவன் எப்படி நம்முடைய நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறாரோ, அப்படியே நாமும் நம்முடைய புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, நம்முடைய தற்போதைய நிலைக்குக் கொஞ்சம் மேலேயுள்ள புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கணும். அப்போதுதான், அவற்றைப் பின்தொடர நம்முடைய முழு முயற்சியையும் செய்ய முடியும். Shade of His Hand, 1216 L