Luke 18:31, 34
“பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும்.”
Daily Devotionals
NEW MERCIES

கடவுளின் புரியாத அழைப்பு

ஆவணி 5, 20262 நிமிட வாசிப்பு

இயேசு கிறிஸ்துவை முற்றிலும் பேரழிவாகத் தோன்றிய ஒன்றிற்குத் தேவன் அழைத்தார். அதேபோல், இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களைத் தம்மைப் படுகொலை செய்யப்படுவதைப் பார்க்க அழைத்தார். அது அவர்கள் ஒவ்வொருவரின் இருதயத்தையும் உடைத்த இடத்திற்குக் கொண்டு சென்றது. தேவனுடைய பார்வையைத் தவிர, மற்ற எந்தப் பார்வையின்படியும் பார்த்தால், இயேசுவின் வாழ்க்கை முழுக்க முழுக்கத் தோல்வியாகத் தெரிந்தது. ஆனால் மனிதர்களின் பார்வையில் தோல்வியாகத் தெரிந்தது, தேவனுடைய பார்வையில் வெற்றியாக இருந்தது. ஏனென்றால், தேவனுடைய நோக்கம் எப்பொழுதும் மனிதனுடைய நோக்கத்தைப் போல இருப்பதில்லை.

தேவனுடைய இந்தப் புரியாத அழைப்பு நம்முடைய வாழ்க்கையிலும் வருகிறது. தேவனுடைய அழைப்பை வெளிப்படையாக விளக்கவோ, முழுமையாகப் புரிந்துகொள்ளவோ முடியாது. அது நம்முடைய உள்ளான இயல்பால் மட்டுமே உணர்ந்து புரிந்துகொள்ள முடிகிற ஒன்று. தேவனுடைய அழைப்பு கடலின் அழைப்பைப் போன்றது. கடலின் தன்மை உள்ளவர்களுக்குத்தான் அது கேட்கும். தேவன் நம்மை எதற்காக அழைக்கிறார் என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், அவருடைய அழைப்பு அவருடைய நோக்கங்களை நிறைவேற்ற அவருடைய நண்பராக இருப்பதுதான். தேவன் எதை விரும்புகிறார் என்பதை உண்மையிலேயே நம்புவதுதான் நம்முடைய உண்மையான சோதனை. நடக்கிற காரியங்கள் எதார்த்தமாக நடக்கிறதில்லை. அவை அனைத்தும் தேவனுடைய கட்டளைப்படிதான் நடக்கின்றன. தேவன் அவருடைய நோக்கங்களைச் சரியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.

நாம் தேவனோடு ஐக்கியமாகவும் ஒன்றாகவும் இருந்து, அவர் நம்மை அவருடைய நோக்கங்களுக்குள் கொண்டு செல்கிறார் என்பதை உணர்ந்தால், அவருடைய நோக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ள நாம் இனிமேல் போராட மாட்டோம். கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் வளர வளர, வாழ்க்கை நமக்கு இன்னும் எளிமையாகிவிடுகிறது. ஏனென்றால், “தேவன் ஏன் இதை அல்லது அதை அனுமதித்தார்?” என்று கேட்கும் மனநிலை குறைந்துவிடுகிறது. வாழ்க்கையில் நடக்கிற எல்லாவற்றிற்கும் பின்னால் தேவனுடைய வல்லமையான நோக்கம் இருப்பதை நாம் பார்க்கத் தொடங்குகிறோம். அந்த நோக்கத்தோடு நம்மை ஒன்றாக இணைக்க, தேவன் நம்மை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார். கிறிஸ்தவர் என்பவர், தன்னுடைய திறமைகளை நம்பாமல், தேவனுடைய அறிவையும் ஞானத்தையும் நம்புகிறவர். நமக்கென்று சொந்த நோக்கம் இருந்தால், அது தேவனுடைய பிள்ளைகளுக்குரிய எளிமையையும் அமைதியான ஓட்டத்தையும் கெடுத்துவிடும்.

சங்கீதம் 68-69; ரோமர் 8:1-21


ஆஸ்வால்டிடமிருந்து ஞானம்

ஆபிரகாமின் வாழ்க்கை இரண்டு விஷயங்களை நமக்குக் காட்டுகிறது: தேவனிடம் முழுமையாகச் சரணடைவது, மற்றும் தம்முடைய பிள்ளையை அவருடைய உயர்ந்த நோக்கத்திற்காக தேவன் முழுவதும் சொந்தமாக்கிக்கொள்வது.
அடுத்து எங்கே என்று தெரியாமல்