“இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், “நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார்.”
நிபந்தனையற்ற அடையாளத்தின் “புறப்படுதல்” – ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்
அந்த ஐசுவரியமுள்ள வாலிப அதிகாரியிடம் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை இருந்தது. அவர் இயேசு கிறிஸ்துவைப் பார்த்தபோது, அவரைப்போலவே இருக்க விரும்பினார். நம்முடைய ஆண்டவர் ஒரு சீஷனை அழைக்கும்போது, அவனுடைய சொந்தப் பரிசுத்தத்தை எல்லாவற்றுக்கும் மேலாக வைப்பதில்லை. இயேசுவின் முக்கிய நோக்கம் என்னவென்றால், என்மீது எனக்குள்ள உரிமையை நான் முழுமையாக விட்டுக்கொடுத்து, அவரோடு என்னை இணைத்துக் கொள்வதுதான். அதாவது, அவரோடு இருக்கும் உறவைத் தவிர வேறு எந்த உறவுக்கும் இடமில்லாத ஒரு உறவைக் கொண்டிருப்பது. லூக்கா 14:26 இரட்சிப்பைப் பற்றியோ, பரிசுத்தமாக்குதலைப் பற்றியோ இல்லை. அது இயேசு கிறிஸ்துவோடு நிபந்தனையற்ற முறையில் நம்மை முழுமையாக இணைத்துக் கொள்வதைப் பற்றியே பேசுகிறது. இயேசுவோடு நிபந்தனையற்ற முறையில் நம்மை இணைத்துக் கொள்வது, அவரிடம் முழுமையாகச் சரணடைவது என்றால் என்ன என்பதைக் குறித்த உண்மையான புரிதல் நம்மில் மிகச் சிலருக்கே இருக்கிறது.
“அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்தார்…” (மாற்கு 10:21). இயேசுவின் இந்தப் பார்வை, வேறு எந்த நபரிடமோ பொருளிடமோ உள்ள பற்றிலிருந்து உங்கள் இருதயத்தை என்றென்றைக்குமாகப் பிரித்துவிட வேண்டும். இயேசு உங்களை எப்போதாவது இப்படிப் பார்த்திருக்கிறாரா? இயேசுவின் இந்தப் பார்வை மாற்றுகிறது, ஊடுருவுகிறது, கட்டிப்போடுகிறது. தேவனிடம் நீங்கள் எங்கே மென்மையாகவும் இணக்கமாகவும் இருக்கிறீர்களோ, அங்கேதான் ஆண்டவர் உங்களைப் பார்த்திருக்கிறார். நீங்கள் கடின உள்ளம் கொண்டவராகவும், பழிவாங்க நினைப்பவராகவும், உங்கள் வழியிலேயே நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவராகவும், உங்களை விட அடுத்தவர்தான் அதிகம் தவறு செய்கிறார் என்று எப்போதும் நினைப்பவராகவும் இருந்தால், அவருடைய பார்வையால் இன்னும் மாற்றப்படாத பல பகுதிகள் உங்கள் சுபாவத்தில் இருக்கின்றன.
“ஒரே ஒரு குறை உன்னிடத்தில் உண்டு….” இயேசு கிறிஸ்துவின் பார்வையில், அவருக்கும் நமக்கும் நடுவில் எதுவும் இல்லாமல், அவரோடு ஒன்றாக இருப்பதுதான் ஒரே நல்லது.
“…உனக்கு உண்டானவையெல்லாம் விற்று….” நான் வெறும் உயிரோடு இருக்கும் ஒரு மனிதனாக மட்டும் மாறும் வரை என்னை நான் தாழ்த்த வேண்டும். இரட்சிப்புக்காக அல்ல (ஏனென்றால் ஒரு மனிதனை இரட்சிப்பது ஒரே ஒரு விஷயம்தான்; அது இயேசு கிறிஸ்துவை முழுமையாக விசுவாசித்து நம்புவதுதான்), இயேசுவைப் பின்பற்றுவதற்காகவே என்னுடைய எல்லா உடைமைகளையும் நான் துறக்க வேண்டும். “…வா, என்னைப் பின்பற்றி வா.” அவர் நடந்த பாதையே அந்த வழிதான்.
ஏசாயா 5-6; எபேசியர் 1
ஆஸ்வால்டின் ஞானம்
தேவனுடைய வார்த்தையை உங்களுக்கு வசதியான சொந்தக் கருத்துகளுக்காக மாற்றிக் கொள்வதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். — சீஷத்துவத்தின் உண்மை, 386 R
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.